GV Prakash: மீண்டும் செல்வராகவனுடன் இணையும் ஜிவி பிரகாஷ்.. பாட்டெல்லாம்.. ஜிவி அப்டேட்!
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், தன்னுடைய பாடல்களில் உணர்ச்சிப்பூர்வமான இசையை புகுத்தி அதன்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என அடுத்தடுத்த தளங்களில் செயல்பட்டு வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்று வருகின்றன. தனுஷுடன் இணைந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இசையமைத்து முடித்துள்ள ஜிவி பிரகாஷ், அடுத்ததாக இட்லிகடை படத்திலும் இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையுடன் சினிமாவில் வலம்வந்து கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ். இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் அதற்கு ஏற்ப தன்னுடைய பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்து வருகிறார். பல வெற்றி படங்களுக்கு இவரது இசையும் முக்கியமான காரணமாக அமைந்து வருகிறது. சமீபத்தில் இவரது இசையில் பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டியது.
செல்வராகவனுக்கு நன்றி: முன்னதாக இயக்குனர் செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களில் இணைந்து செயலாற்றியுள்ளார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தான் சக்சஸ்ஃபுல் இசையமைப்பாளர் என்ற கேட்டகிரியில் இருந்து முன்னணி இசையமைப்பாளராக மாறியது ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு தான் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அந்தப் படத்திற்காக தன்னை தேர்வு செய்ததற்கு செல்வராகவனுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ் -செல்வராகவன் கூட்டணி: அடுத்ததாக செல்வராகவனுடன் அவரது இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளதாகவும் அந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த கதைக்களத்தை மிகவும் விரும்பி செல்வராகவன் இயக்கி வருவதாகவும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் சிறப்பான படங்கள் அமைந்த நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் அந்த படத்திற்காக ரசிகர்கள் தற்போதே தங்களது எதிர்பார்ப்பை தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதனிடையே, அடுத்ததாக தனுஷுடன் இணைந்து இட்லிகடை படத்திலும் இசையமைத்து வருகிறார்.
தனுஷுடன் அடுத்தடுத்த படங்கள்: தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மிகப்பெரிய யூத் சப்ஜெக்டாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அடுத்தடுத்த பாடல்களும் அதே போன்ற அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் -ஜிவி பிரகாஷ் காம்பினேஷன் போலவே செல்வராகவன் -ஜிவி பிரகாஷ் காம்பினேஷனும் அதிரடி சரவெடியாக அமைந்ததுதான். இந்நிலையில் இவர்கள் காம்பினேஷனில் அடுத்ததாக ஒரு படம் உருவாக உள்ளது குறித்து ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











