GV Prakash - ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது - என்ன சொல்கிறார் ஜிவி பிரகாஷ்?

சென்னை: GV Prakash (ஜிவி பிரகாஷ்) ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசியிருக்கிறார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். தனது பதின்ம வயதிலேயே இயக்குநராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமான துள்ளுவதோ இளைமை படத்தில் தனுஷும் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ஒருதரப்பினரிடம் கடும் விமர்சனங்களை சந்தித்தன.அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ், சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் செல்வராகவன்.

அதுவரை ஒருதலை காதலோ, இருதலை காதலோ காதல் என்றாலே சாந்தமாக பலர் படமாக்கிவந்த சூழலில் காதல் கொண்டேன் படத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்கி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பும் பெரிதும் கொண்டாடப்பட்டது.

Music Director GV Prakash Talks about Ayirathil oruvan 2

தனுஷ் எனும் மகா நடிகனை செதுக்கிய உளி:தனுஷ் இன்று ஹாலிவுட் வரை வளர்ந்துவிட்ட ஹீரோ. அவரது நடிப்புக்கு தற்போது யாருமே ஈடுகொடுக்கமாட்டார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட தனுஷை உருவாக்கியவர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தனுஷை வைத்து செல்வா இயக்கிய அத்தனை படங்களிலும் தனுஷிடம் மிகச்சிறந்த நடிப்பை வாங்கியிருப்பார்.

இதனால் தன்னை செதுக்கியவர் செல்வராகவன் என தனுஷே பலமுறை கூறியிருக்கிறார். இவை தவிர செல்வராகவன் மற்ற ஹீரோக்களை வைத்து இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் படமெல்லாம் காலத்துக்கும் அழியாதவை.

கொண்டாட மறந்த ஆயிரத்தில் ஒருவன்: பாகுபலியையும், பொன்னியின் செல்வனையும் இப்போது அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த ஜானரில் ஆயிரத்தில் ஒருவனை பல வருடங்களுக்கு முன்பே செல்வராகவன் செய்திருந்தார். கார்த்தி,ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அந்தப் படம் வெளியானபோது ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படவில்லை. காலம் கடந்து இப்போது கொண்டாடுகிறார்கள்.

Music Director GV Prakash Talks about Ayirathil oruvan 2

ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது: ஆயிரத்தில் ஒருவன் படத்தை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர். இப்படிப்பட்ட சூழலில் அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என செல்வராகவன் அறிவித்திருந்தார். அதில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். ஆனால் அதற்கு அடுத்ததாக படத்தின் ஷூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் சொல்வது என்ன?: இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் நடிக்கிறார். அந்தப் படம் நடந்தால் சந்தோஷப்படுவேன். செல்வராகவனிடம் அடுத்த பாகத்தின் கதையைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X