அந்த விஷயத்தில் தனுஷ்தான் வழிகாட்டினார்.. சந்தோஷமா இல்லையானு தெரியாது.. ஓபனாக பேசிய ஜிவி பிரகாஷ்
சென்னை: ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வந்தன. அதில் இடம்பெற்ற இசை பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிக்க சென்றதால் அதிக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்துவந்த ஜிவி பிரகாஷ் இப்போது மீண்டும் இசையமைப்பில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கடைசியாக அவரது நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் பிரகாஷ் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இடையில் நடிக்க சென்ற அவர் இசையமைப்பதை குறைத்துக்கொண்டார். ஆனால் அவர் தொடர்ந்து இசையமைக்க வேண்டுமென்பதுதான் அவரது ரசிகர்களின் வலுவான கோரிக்கையாக இருந்தது. சூழல் இப்படி இருக்க தொடர்ந்து அவர் மீண்டும் இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் அவரது இசையமைப்பில் அண்மையில் வெளியாகின. அடுத்ததாக குட் பேட் அக்லி, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். நடிப்பிலும் பிஸியாக இருக்கும் அவர் கடைசியாக கிங்ஸ்டன் படத்தில் நடித்திருந்தார்.

விவாகரத்து: இதற்கிடையே ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அதனை சைந்தவியும் உறுதிப்படுத்தினார். இவர்கள் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இசை கச்சேரிகளில் ஒன்றாகவே பயணப்படுகின்றனர். சமீபத்தில்கூட நடந்த ஒரு கான்செர்ட்டில் சைந்தவி பிறை தேடும் இரவிலே பாடலை பாடினார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது.
ஜிவி பிரகாஷின் பேட்டி: இந்நிலையில் ஜிவி பிரகாஷ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த அந்தப் பேட்டியில், "இருபது வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் அனுபவத்தால் பலவற்றை சமாளிக்க முடிகிறது. இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என இருந்தாலும் நல்ல ஆல்பங்களை ரசிகர்களுக்கு என்னால் கொடுக்க முடிகிறது. இத்தனை வருட அனுபவம் எனக்கு பெரிதாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்வேன். நல்ல கதைகள் நல்ல இசையை உருவாக்க உத்வேகம் கொடுக்கின்றன. அதனால்தான் பா.இரஞ்சித், சுதா கொங்கரா, ராஜ்குமார் பெரியசாமி, வெங்கி அட்லூரி போன்ற இயக்குநர்களின் படங்கள் ஹிட்டாகக்கூடிய இசையை கொடுக்க முடிந்தது.
வழிகாட்டினார்கள்: அவர்கள் எனக்கு ஒரு காலக்கெடுவை கொடுத்து அதற்கு அந்த வகையான வேலைகளை செய்ய வழிகாட்டினார்கள். ஒருபுறம் ஹே மின்னலே போன்ற மெல்லிசைக்கும், மறுபுறம் கோல்டன் ஸ்பேரோ போன்ற துள்ளல் பாடலுக்கும் இசையமைக்கிறேன். எனது வலிமை எப்போதும் எனக்கு குத்து பாடல்கள் இல்லை. ஆனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்காக கோல்டன் ஸ்பேரோ பாடலை இசையமைத்தேன். கதைக்கு வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன். அதுமட்டும் இல்லாமல் படத்தின் கதைதான் அத்தனைக்கும் அடிப்படை என்று நான் நம்புகிறேன்.

இவர்கள்தான் உத்வேகம்: கதையை அடிப்படையாகக் கொண்டு மென்மையான இசை அல்லது வேறு ஜானரில் பாடலை உருவாக்குகிறேன். இது கதையுடன் தொடர்புடையது. நான் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையை கேட்டுத்தான் வளர்ந்தேன். அப்படித்தான் நான் இசையமைக்க எனக்கு உத்வேகம் கொடுத்தது. என்னை ரொமான்டிக் மெல்லிசைக்காக ரசிகர்கள் அறிந்துகொள்வது எனக்கு சந்தோஷமா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது எனக்கு இயல்பாகவே வருகிறது.கோல்டன் ஸ்பேரோ பாடல் முழுக்க முழுக்க இயக்குநரின் வழிமுறையை பின்பற்றிதான் இசையமைத்தேன். அந்தப் பாடலுக்கு தனுஷ் என்னிடம், வரிகள் எப்படி இருக்கும், பாடல் எப்படி பேசப்படப்போகிறது என்பதை சொன்னார்.
அப்படித்தான் முயற்சித்தோம்: மேலும் பாடலின் அணுகுமுறை குறித்தும் எனக்கு விளக்கிவிட்டார். அதன்படித்தான் அந்தப் பாடலில் கொஞ்சம் ஃபங்கியாகவும், வித்தியாசமாகவும் நவீனமாகவும் அந்தப் பாடலில் ஏதேனும் செய்வதற்கு முயசித்தோம். அதனால் கோல்டன் ஸ்பேரோ பாடல் மக்களிடம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. வேலையை பொறுத்தவரை தேவைப்படும் நேரத்தில் செய்கிறேன். நான் என் வேலையை தள்ளிப்போடவோ அல்லது கடைசி நேரத்திலோ செய்யமாட்டேன். இயக்குநர் சொன்ன நேரத்துக்குள் நான் எனது வேலையை முடிக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு நடிப்பதற்கும், 15 நாட்களுக்கு இசையமைக்கவும் செய்கிறேன். எனக்கென்று ஒரு அட்டவணை உண்டு. அடுத்த இரண்டு மாதங்களுக்கான பிளான்கள் இப்போது எனது கைகளில் இருக்கின்றன.

படம் சரியாக போகவில்லை: நான் நடித்து இசையமைத்து தயாரித்த கிங்ஸ்டன் திரைப்படம் சரியாக போகவில்லைதான். அதற்காக எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. ஒரு படம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா, எனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை கவனிக்காமல் கடினமாக உழைப்பதில் மட்டுமே நான் எனது கவனத்தை செலுத்துகிறேன். 100 சதவீத உழைப்பை கொடுக்கிறேன். நடிப்பாக இருந்தாலும் இசையமைப்பதாக இருந்தாலும் நான் வேலை செய்வதை ரசிக்கிறேன். அந்த நேரத்தில் நான் முழுமையாக இருக்கிறேன். முடிந்த அளவு சிறப்பாக செய்கிறேன். அடுத்ததாக இட்லி கடை, குட் பேட் அக்லி, வீர தீர சூரன், வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கராவின் பராசக்தி படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நடிகராக இயக்குநர் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அது காதல் ஜானரில் உருவாகும் படம்.
இளையராஜா பற்றி ஜிவி பிரகாஷ்: லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு இளையராஜா சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இளையராஜா சிம்பொனியை அரங்கேற்றியது இந்திய சினிமாவுக்கே பெருமை. அவர் நமது மண்ணில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும். அவர் அனைவருக்குமே மிகப்பெரிய உத்வேகம். மேற்கத்திய கிளாசிக்கல் இசையோ, நாட்டுப்புற இசையோ, எந்த வகையான இசையாக இருந்தாலும் அவர் கையாளும் விதம் ரொம்பவே பாராட்டுக்குரியது. அவர் ஒரு புராணம். நான் அவரை வணங்குகிறேன். மகிழ்சியோடு இருக்கிறேன்.
நாங்கள் புரிந்துகொண்டோம்: தனுஷுடன் நான் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. நாங்கள் சினிமாவில் ஒன்றாக வளர்ந்திருக்கிறோம். அந்தவகையில் எங்களுக்கிடையே ஆழமான புரிதல் இருக்கிறது. எங்களுக்குள் உரையாடலும் நன்றாக இருக்கும். எனவே ஹிட் பாடல்களை எளிதாக கொடுக்க முடிகிறது. இட்லி கடை பாடல்களும் கண்டிப்பாக அருமையாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார். அவரது இந்தப் பேட்டிதான் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











