விரைவில் மாறன் படத்தின் டைட்டில் பாடல்... ஜிவி பிரகாஷ் அப்டேட்
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக உள்ள படம் மாறன்.
இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்குமார். படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் டைட்டில் பாடல் ரிலீசாக உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மாறன் படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ்
தனுஷின் முந்தைய படம் ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றது. தற்போது இவரது மாறன் படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசை
மாறன் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலையொட்டி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் அப்டேட்
இந்நிலையில் இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது அப்டேட்டை வெளியிட்டுள்ளார். படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் விரைவில் டைட்டில் பாடல் வெளியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாறன் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்களுக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த அப்டேட் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்
ஏற்கனவே மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஒருவரின் தலையை கிளாஸ் டேபிளில் தனுஷ் அழுத்தி கண்ணாடியை உடைப்பது போலவும், உடைந்த கண்ணாடிகளில் தனுஷின் வித்தியாசமான ரியாக்ஷன்கள் காணப்படுவதாகவும் இந்த போஸ்டர் அமைந்திருந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைரக்டர் கார்த்திக் நரேனின் முந்தைய படங்கள் மாறன் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











