ஒரே நாளில் ஜி.வி. பிரகாஷின் இரண்டு படங்களின் அப்டேட்கள்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ஜி.வி!
சென்னை: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் வலம் வரக்கூடியவர்களில் ஜி.வி. பிரகாஷ்குமாரும் ஒருவர். இவர் நடித்த படங்கள் பாராட்டைக் குவித்தாலும் இவர் இசை அமைத்த படங்கள் அவருக்கு பேரும் புகழும் விருதும் சேர்த்து வருகின்றது. இவரது இசையமைப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று படம் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினை வென்றது.
தற்போது தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டு இருக்கும் இசையமைப்பாளராக அனிருத் உள்ளார். இது அனிருத் எரா, அதாவது அனிருத் காலம் என பலரும் பேசிவரும் நிலையில், நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி முழுக்க முழுக்க இசை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார் ஜி.வி. பிரகாஷ் குமார். பெரிய நடிகர்கள் தொடங்கி சின்ன பட்ஜெட் படங்கள் வரை இசை அமைத்துக் கொடுக்கின்றார் ஜி.வி.

தற்போது இவரது கையில் தமிழ் சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அனிருத் எராவாக இருந்தாலும் அங்கு என்னோட கொடியும் உயரப் பறக்கும் எனக் கூறும் அளவிற்கு சைலண்ட்டாக சம்பவம் செய்து வருகின்றார் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது இசையில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் தங்கலான். அதேபோல் இவரது இசையில் உருவாகியுள்ள படம் அமரன்.
ஜி.வி.பி. ட்வீட்: இந்த இரண்டு படங்களின் அப்டேட்டும் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி இவர் இசை அமைத்துள்ள இரண்டு படங்களில் இருந்தும் அப்டேட்டுகள் வருகின்றது. அதாவது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள தங்கலான் படத்தில் இருந்து முதல் மேனா மினுக்கி எனும் முதல் பாடலும், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்கமல் புரெடக்ஷன்ஸ் மற்றும் எஸ்.கே. எண்டர்டைமெண்ட் இணைந்து தயாரித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.
இதனால் இந்த இரண்டு படங்களிலும் முக்கிய அங்கம் வகிக்கும் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், ”இது தங்கலான் நாள், இது அமரன் நாள்” என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அவரை பின் தொடருபவர்கள் பலர் லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
ஜி.வி. பிரகாஷ்: தங்கலான் மற்றும் அமரன் ஆகிய இரண்டு படங்களும் உண்மைச் சம்பவங்களை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் இதில் தங்கலான் படம் ஆங்கிலேயர் காலத்து படம் என்பதால் இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் எந்தமாதிரி பின்னணி இசை அமைத்துள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஏற்கனவே இதேபோன்ற பிரியாடிக் படமான மதராசப்பட்டினம் படத்திற்கு அனைவரையும் உறைய வைக்கும் அளவிற்கு பின்னணி இசை சேர்த்து மிரட்டி இருந்தார். இந்நிலையில் தங்கலான் படமும் பிரியாடிக் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் அமரன் படமும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுத்துள்ளனர்.
2024: இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே சோதனையான ஆண்டாகத்தான் போயுள்ளது. முதல் ஆறு மாதங்களில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் பெரும்பாலும் தியேட்டரில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் என்பதே அரிது என சொல்லும் சூழல் உருவாகிவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் கூட படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு கல்லா கட்டவில்லை என்றே பேச்சுகள் அடிபடுகின்றது.
இதுவரை: முதல் பாதியில் ரிலீஸ் ஆன படங்களிலேயே, ஓரளவுக்கு வெற்றி பெற்ற படங்கள் லிஸ்ட்டில் பி.டி. சார், லவ்வர், ப்ளூ ஸ்டார், அரண்மனை 4, கருடன், மகாராஜா உள்ளிட்ட படங்கள் மட்டுமே உள்ளது. இரண்டாம் பாதியில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆக வரிசை கட்டிக்கொண்டு உள்ளது. இதில் முதல் படமாக உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படமும் படுதோல்வியைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications











