Brother: மக்காமிஷி பாடலுக்கு ஜெய ரவியுடன் நச்சுனு ஆட்டம் போட்ட ஹாரீஸ் மாம்ஸ் - ட்ரெண்டாகும் வீடியோ!
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் பிரதர். இந்தப் படத்தினை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை இயக்கிய ராஜேஸ் இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், நட்ராஜ், விடிவி கணேஷ், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், படத்தில் இடம் பெற்றுள்ள படலான மாக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜேஸ் பேசுகையில்," எனக்கு நிஜ வாழ்க்கையில் உடன் பிறந்த அக்காவோ தங்கையோ இல்லை. ஆனால் எனக்கு உறவு முறைகளில் பழக்க வழக்கங்களில் அக்கா தங்கைகள் உள்ளனர். இந்தப் படம் நான் எடுக்க காரணமே, இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் படம் பார்த்த பின்னர், தங்களது அக்காவுக்கு போன் செய்து பேசவேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்கவேண்டும். அல்லது அக்கா இல்லையே என அழவாவது வேண்டும். இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தப் படத்தை எடுத்தோம் எனக் கூறினார்.

அதேபோல் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனுமான, மோகன்ராஜா பேசுகையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, " எனக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் எனது தம்பி மட்டும் இல்லை, என் தம்பியின் சகோதரர்களான ஜெயம் ரவியின் ரசிகர்களைப் பார்ப்பதற்காகத்தான் வந்தேன் . எனக்கு மிகவும் சந்தோஷமான மற்றொரு விஷயம் என்னவென்றால், இதை நான் இதற்கு முன்னர் எங்கேயும் கூறியதில்லை. ஆனால் இப்போது கூறுகின்றேன். நான் எனது தம்பியின் நடிப்பைத் தாண்டி, அவரது நடனத்திற்கு நான் தீவிர ரசிகன். எனது தம்பி ஆடுகின்றான் பார் என பெருமையோடு பார்த்துக் கொண்டு இருந்தேன். தமிழ் சினிமாவில் டாப் 5 பெஸ்ட் நடனம் ஆடும் நடிகர்களில் எனது தம்பியும் இருக்கின்றார் என பெருமையாக உள்ளது" என பேசினார்.
ஹாரீஸ் நடனம்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மேடைக்கு வந்தார். அதன் பின்னர் அவர் பேசுவதற்கு முன்னதாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ஹாரீஸ் ஜெயராஜ் நடிகர் ஜெய்ம் ரவியுடன் இணைந்து நடனம் ஆடுவார் எனக் கூறினார். உடனே ஒப்புக்கொண்ட இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஜெயம் ரவி ஆடத்தொடங்குவதற்கு முன்னரே நடனம் ஆடினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, தொடர்ந்து உற்சாகமாக ஆடினார்.

செல்ஃபி: தொடர்ந்து ரசிகர்கள் ஜெயம் ரவியை மேடையில் இருந்து கொண்டு செல்ஃபி எடுக்கச் சொன்னார்கள். உடனே ஜெயம் ரவி மேடையில் இருந்த ஹாரீஸ் ஜெயராஜ் உடன் இணைந்து தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ஹாரீஸ் ஜெயராஜ் நடனம் ஆடியதற்கு ரசிகர்கள், ஹாரீஸ் மாம்ஸ் டேன்ஸ் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











