என்னது ஜெயம் ரவியோட 30வது படத்துல இவரா... கலக்கல் காம்போ தான்!
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது 30வது படத்தில் டைரக்டர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் கலக்கல் இசையமைப்பாளர் இணைந்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார். தொடர்ந்து முன்னதாக தனது பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் தாடி வைத்த கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.

ராஜேஷுடன் இணையும் ஜெயம் ரவி
இந்நிலையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் டைரக்ஷனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படம் அவரது 30வது படமாகும். தன்னுடைய படங்களில் காமெடி மற்றும் காதலை மையமாக வைத்து இயக்கி வருபவர் ராஜேஷ்.

குடும்ப சென்டிமெண்ட் படம்
இந்நிலையில் ஜெயம் ரவியை வைத்து அவர் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிகிறது. ஜெயம் ரவி படங்களில் காமெடியும் இணைந்து காணப்படும் இந்நிலையில் காமெடியை பிரதானமாக வைத்து படங்களை இயக்கும் ராஜேஷுடன் அவர் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசை
இந்த காம்பினேஷனே சிறப்பாக பார்க்கப்படும் நிலையில், படத்தில் கூடுதலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Recommended Video

4வது முறையாக கூட்டணி
இதேபோல ஜெயம் ரவியின் தாம் தூம், எங்கேயும் காதல் மற்றும் வனமகன் படங்களுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நான்காவது முறையாக ஜெயம் ரவியின் படத்திற்கு அவர் இசையமைக்கவுள்ளார். காதல் பாடல்களை மிகவும் அழகாக தந்து வருபவர் ஹாரீஸ் ஜெயராஜ். அவரிடம் இருந்து சிறப்பான பாடல்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











