Harris Jayaraj: எல்லாரும் இப்படித்தான் கூப்பிடுறாங்க.. ஹாரிஸ் சொன்ன சீக்ரெட்.. என்ன காரணம்?
சென்னை: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பல ஆண்டுகளாக முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் ஜெயம் ரவியின் பிரதர் படம் வெளியாகி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவியுடன் ஜேஆர் 34 படத்தில் இசையமைக்க கமிட்டாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். முன்னதாக பிரதர் படத்தின் பிரமோஷனின் போது இவர் தன்னை படக்குழுவினர் எப்படி கூப்பிடுவார்கள் என்பது குறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதுகுறித்து பிரியங்கா மோகனும் பேசியிருந்தார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பல ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் தன்னை முன்னணி இசையமைப்பாளராக தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார். இவரது இசையில் பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து மெலடி சாம்ராஜ்யத்தில் அவர்களை தள்ளியுள்ளது. அந்த வகையில் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படத்திற்கும் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள், இசை சிறப்பான விமர்சனங்களை பெற்றன. குறிப்பாக மக்காமிஷி என்று தமிழ் உலகத்திற்கு புதிய வார்த்தையை சேர்த்திருந்தார் ஹாரிஸ்.
ஹாரிஸ் ஜெயராஜிற்கு செல்ல பெயர்: இந்நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் ஜேஆர் 34 படத்திற்கும் இசையமைக்க கமிட்டாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், தன்னை படக்குழுவினர் எப்படி கூப்பிடுவார்கள் என்பது குறித்து தனது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். தன்னை மாம்ஸ் அதாவது MAMS என்று தான் படக்குழுவினர் கூப்பிடுவார்கள் என்றும் மாம்ஸ் Master at Music and Sound என்று அவர்கள் அர்த்தம் சொல்வதாகவும் சிரித்தபடி ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை பிரியங்கா மோகனும் பேசியதை பார்க்க முடிந்தது.

அது ஒரு ஏமோஷன்: அது ஒரு எமோஷன் என்று அவர்கள் உற்சாகம் தெரிவிப்பதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது போலவே தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் மின்னலே படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஹாரிஸ், முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையை சிறப்பாக பதித்திருந்தார். மாதவன், ரீமா சென் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மிகபெரிபய வெற்றிக்கு பாடல்களும் காரணங்களாக அமைந்தன. குறிப்பாக வசீகரா பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரைட்டாக உள்ளது.
சிறப்பான ரீ-என்ட்ரி: ஹாரிஸ் ஜெயராஜின் அப்பாவும் சினிமாவை சேர்ந்தவர்தான். இவர் மலையாளத்தில் கிட்டாரிஸ்டாக இருந்தவர். பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஹாரிஸ், ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக தொடர்ந்து இருந்து வருகிறார். இடையில் சில காலங்கள், இவர் அதிகமான படங்களுக்கு இசையமைக்காத நிலையில், மீண்டும் தன்னுடைய ரீ-என்ட்ரியை சிறப்பாக அமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











