Ilaiyaraaja: ஊட்டிவிட்ட தகப்பன்சாமி.. ஆசையுடன் வாங்கிக் கொண்ட யுவன்சங்கர் ராஜா!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடந்து 1400-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். தற்போதும் இசையமைத்து வருகிறார். தான் எப்போதும் இசைஞானி தான் என்பதை தொடர்ந்து தன்னுடைய இசை மற்றும் பாடல்கள் மூலம் புலப்படுத்தி வருகிறார். இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தற்போது விஜயின் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மொரிஷியஸ் தீவில் உள்ளதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவும் மொரிஷியஸ் வந்துள்ளதாக இளையராஜா பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்து மொரிசியசில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Music director Ilaiyaraaja happy sharing on Yuvan s arrivan to Mauritius

இசைஞானி இளையராஜா: பல ஆண்டுகளைக் கடந்து தன்னுடைய மெஸ்மரைசிங் இசையால் ஏராளமான ரசிகர்களை உள்ளூரில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் கவர்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. தனிமையில் இருப்பவர்களுக்கு இவரது இசை மற்றும் பாடல்கள் தான் தாலாட்டு. இதே போல கொண்டாட்டங்களுக்கும் இவரது பாடல்கள் தான் இப்போதும் கை கொடுத்து வரும் விஷயமாக உள்ளது. அந்த வகையில் 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா தற்போதும் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் கூலி படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தார் இளையராஜா.

மொரிஷியசில் இளையராஜா: இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தன்னுடைய பாடலை கூலி படத்தின் டைட்டில் புரோமோவில் இருந்து நீக்க வேண்டும் என்று இளையராஜா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இளையராஜா மொரிசியசில் தன்னுடைய விடுமுறையை கொண்டாடி வருகிறார். அவர் தனியாக சென்று தன்னுடைய விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக ரசிகர்கள் நினைத்தனர். அதற்கேற்ப அவர் முன்னதாக வெளியிட்டிருந்த புகைப்படத்தில் தான் மொரிசியசில் இருப்பதாக தனியாக தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

சாப்பாடு ஊட்டிவிட்ட இளையராஜா: இந்நிலையில் தற்போது தன்னுடைய மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவனும் மொரிசியஸ் வந்துள்ளதாக இளையராஜா தன்னுடைய அடுத்த புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யுவன் சங்கர் ராஜாவிற்கு இளையராஜா சாப்பாடு ஊட்டி விடுவது போல காணப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவும் மிகவும் ஆர்வமுடன் தன்னுடைய தந்தையின் கைகளால் சாப்பாட்டை வாங்கி சுவைப்பதாக இந்த புகைப்படத்தில் காணப்பட்டது. இந்தப் புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Music director Ilaiyaraaja happy sharing on Yuvan s arrivan to Mauritius

கோட் படத்தில் இசையமைப்பாளர்: அடுத்தடுத்து இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் தங்களுடைய படங்களில் மிகவும் பிஸியாகவே உள்ளனர். இருந்தபோதிலும் கிடைத்த கேப்பில் இருவரும் மொரிசியஸ் சென்று தங்களை புதுப்பித்துக் கொள்வது சிறப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன். இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். விரைவில் சூட்டிங் நிறைவடையவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியான சூழலில், அடுத்ததாக விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் 2வது சிங்கிள் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X