Ilaiyaraaja: இளையராஜா வெளியிட்ட உற்சாகப்பதிவு.. வாவ் 35 நாட்கள்ல இப்படி ஒரு சாதனையா?
சென்னை: இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து பல்லாயிரக்கணக்கான பாடல்களை வெற்றி பாடல்களாக கொடுத்துள்ளார். அவரது இசை தற்போது வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே அமைந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் விடுதலை படம்.
விடுதலை படத்தின் பாடல்கள் மட்டுமில்லாமல் பிஜிஎம்-மும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சூழலில் அடுத்தடுத்த படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் இளையராஜா. இந்நிலையில் தான் தன்னுடைய புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக இன்று காலை அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, மாலை 6 மணி அளவில் அவர் வீடியோ மூலம் தன்னுடைய புதிய முயற்சி குறித்து உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா: இசைஞானி இளையராஜா பண்ணெடுங் காலங்களாக தன்னுடைய இசையால் அனைவரையும் மயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளில் இவரது இசை சேவை தொடர்ந்து வருகிறது, 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இதுவரை இசையமைத்துள்ள சூழலில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இவரது இசையில் ஹிட்டடித்துள்ளன. இளையராஜா இசையிலேயே எண்பதுகளின் பாடல்கள், 90களின் பாடல்கள் என யூடியூபில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. தற்போது வரை இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் இளையராஜா.
அடுத்தடுத்த படங்களில் பிசி: சமீபத்தில் இவரது இசையில் வெளியான விடுதலை படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் கொடுத்துள்ளன. இந்த படத்தின் பின்னணி பாடல்கள் மற்றும் பிஜிஎம் என அனைத்தும் மாஸ் காட்டி படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தன. இவை மட்டுமில்லாமல் சிம்பொனி உள்ளிட்ட பல தனிப்பட்ட முயற்சிகளிலும் தொடர்ந்து இளையராஜா ஈடுபட்டு வருகிறார். பின்னணி பாடல்கள் மட்டுமில்லாமல் இவையும் அவருக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. தன்னுடைய பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பது உள்ளிட்ட சில சர்ச்சைகளில் அவர் சிக்கினாலும் அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் அவரது இசையை தொடர்ந்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இளையராஜா வீடியோ: இந்த வயதிலும் அவர் துடிப்பான இளைஞரை போல இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தான் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக இளையராஜா தெரிவித்திருந்தார். இது குறித்து என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து தங்களது எதிர்பார்ப்பை வெளியிட்டு வந்தனர். வரும் ஜூலை மாதத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா நடந்து முடிந்துள்ள சூழலில் இது குறித்து இளையராஜா அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இளையராஜா 6:00 மணியளவில் இதற்கான விடையை கொடுத்துள்ளார்.

இளையராஜா உற்சாகம்: தன்னை பற்றி வரும் விமர்சனங்கள் குறித்தெல்லாம் கவலை கொள்ள நேரமில்லாமல் தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள இளையராஜா, தான் 35 நாட்களில் சிம்பொனி இசையை வடிவமைத்துள்ளதாகவும் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். முன்னதாக இதே போன்ற முயற்சியை அவர் மேற்கொண்ட சூழலில் தற்போது மீண்டும் அந்த முயற்சியை குறுகிய காலத்திலேயே அவர் செய்துள்ளது மிகுந்த உற்சாகத்துடன் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பேச்சின் உற்சாகம் பார்க்கும் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. சிறிய குழந்தைக்கான உற்சாகம் அவரது பேச்சில் தென்பட்டது.
ரசிகர்கள் வாழ்த்து: அவரது அடுத்தடுத்த வெற்றிப்பாடல்களின் காரணம் இதன் மூலம் அனைவருக்கும் தெரிய வருகிறது. குழந்தைக்கான மனநிலையிலேயே அவர் தன்னுடைய படங்களின் பாடல்களை அணுகுவது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. அவருடைய இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். திரைப்பாடல்களையும் இசைத்துக் கொண்டு, சிம்பொனியையும் தான் செய்து முடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











