சார்லி மகன் கல்யாணத்துக்கு சென்ற இளையராஜா; பிரேம்ஜி கல்யாணத்துக்கு ஏன் வரல? பங்காளி சண்டை காரணமா?

By MohanRaj

சென்னை: 2024ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கே கல்யாண யோகம் வந்துடுச்சு போல, தமிழ் திரையுலகின் மொரட்டு சிங்கிள் எனப்பட்டவரும் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனுமான பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. நடிகர் சார்லி மகன் அஜய் தங்கசாமிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணங்கள் எல்லாம் தடபுடலாக கடந்த ஒரு வார இடைவெளியில் நடைபெற்றது. சரத்குமார் தனது மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இதற்காக திரையுலகினர் தொடங்கி அரசியல் ஆளுமைகள் வரை பலரையும் சந்தித்து அழைப்பிதழ்கள் வழங்கி வருகின்றார். வரலட்சுமி சரத்குமார் திருமணம் தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Ilayaraaja Gangai Amaran Premgi Actor Charlie Premgi Marriage YSR Venkat Prabhu

பிரேம்ஜி கல்யாணத்தில் சென்னை 28 பட குழுவினர் கலந்து கொண்டு ஜமாய்த்திருந்தனர். அர்ஜுன் மகள் திருமணத்தில் நடிகர்கள் விஜயகுமார், விஷால் உள்ளிட்டோரும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். சார்லி மகன் கல்யாணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, உலக நாயகன் கமல் ஹாசன் வரை பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சார்லி மகன் திருமணத்தில் இசைஞானி இளையராஜாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்.

Ilayaraaja Gangai Amaran Premgi Actor Charlie Premgi Marriage YSR Venkat Prabhu

புகைச்சல் டூ பூகம்பம்: அதுவரை புகைச்சலாக இருந்த பேச்சு, இளையராஜா, நடிகர் சார்லி மகன் கல்யாணத்தில் கலந்து கொண்ட போதுதான் பெரும் சர்ச்சையின் வடிவமாக மாறியது. அதாவது சரியாக 9ஆம் தேதி கங்கை அமரன் மகன் பிரேம்ஜி திருமணம் திருத்தனி முருகன் கோவிலில் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் சார்லியின் மகன் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. திருத்தனியில் நடைபெற்ற தனது தம்பி மகன் திருமணத்தில் இளையராஜா பங்கேற்காத போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அடுத்த நாளே அவர் சார்லி மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டதால் இளையராஜா ஏன், கங்கை அமரன் மகன் கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை? ஆனால் சார்லி மகன் கல்யாணத்தில் மட்டும் கலந்து கொண்டாரே என்ற கேள்விகள் எழுந்தது.

Ilayaraaja Gangai Amaran Premgi Actor Charlie Premgi Marriage YSR Venkat Prabhu

பிரேம்ஜி கல்யாணத்தை புறக்கணித்த இளையராஜா குடும்பம்: இளையராஜா மட்டும் இல்லாமல், பிரேம்ஜி திருமணத்தில் இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய மகனுமான யுவன் ஷங்கர் ராஜாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய இரவு திருமண ஏற்பாடு நிகழ்வுகளில் கலந்து கொண்ட இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவும் திருமணத்தின் போது அங்கு இல்லை. இந்நிலையில் இளையராஜா குடும்பத்தினரே கங்கை அமரன் மகன் கல்யாணத்தை புறக்கணித்துள்ளது புகைச்சலை அதிகமாக்கியுள்ளது.

Ilayaraaja Gangai Amaran Premgi Actor Charlie Premgi Marriage YSR Venkat Prabhu

இதுதான் கோபமா? இப்படியான நிலையில், ஏற்கனவே இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி பலருக்கு நோட்டீஸ் விட்டபோது, இளையராஜாவை அவரது தம்பி கங்கை அமரன் மிகவும் கடுமையாக சாடியிருந்தார். இப்படியான நிலையில் கொரோனா காலத்தில்தான் இருவருக்கும் இடையில் ஓரளவுக்கு சமாதனம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. இதனால் தான், வைரமுத்து, இளையராஜாவை வம்பு இழுத்தபோது மேடையிலேயே வைரமுத்தை கடுமையாக பேசியிருந்தார் கங்கை அமரன் ஆனாலும் தனது தம்பி தன்னை காப்புரிமை தொடர்பான விஷயத்தில் பொதுவெளியில் விமர்சித்தது இளையராஜா மனதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகின்றது. அதனால்தான் திருமணத்தில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் பிரேம்ஜி திருமண அழைப்பிதழில் இளையராஜாவின் பெயர் இல்லாததும் ஒரு காரண்ம் என கூறப்படுகின்றது.

Ilayaraaja Gangai Amaran Premgi Actor Charlie Premgi Marriage YSR Venkat Prabhu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X