Ilayaraja: என்னுடைய இசை இல்லாமல் யாருக்கும் வாழ்க்கை இல்லை.. அதிர்வை வெளிப்படுத்திய இளையராஜா!

சென்னை: இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளைக் கடந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைத்து வருகிறார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியுள்ள இவரது இசைப்பயணம் சிறப்பாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது இசையில் விடுதலை 2 படம் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

மேலும் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு வரிகளையும் கொடுத்துள்ளார் இளையராஜா. சிம்பொனி இசையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த வெர்ஷனை கொடுத்து வருகிறார். இதனிடையே இவரது அடுத்தடுத்த பேட்டிகள் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெற்று வருகின்றன. அனைவரது வாழ்க்கையிலும் தன்னுடைய இசை சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ilayaraja viduthalai 2 movie tamil cinema

இசைஞானி இளையராஜா: இசைஞானி என ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படத்தில் துவங்கிய இவரது பயணம் 80 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து வருகிறது. இந்த வயதிலும் ஆக்டிவாக காணப்படும் இளையராஜா அடுத்தடுத்து படங்களில் இசையமைத்து வருவதுடன் தனி இசை முயற்கிளையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சிம்பொனி இசையின் அடுத்த வெர்ஷனை உருவாக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வரும் இளையராஜா கர்வம் இருந்தால் என்ன தவறு என்பதாக கூறியிருந்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

தன்னுடைய இசையின்றி வாழ்க்கை இல்லை: இதனிடையே பிரபல வாரயிதழுக்கு கொடுத்த பேட்டியில் தன்னுடைய இசை எல்லாருடைய வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்டுள்ளது தனக்கு தெரியும் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். தன்னுடைய இசையை விட்டுவிட்டு ரசிகர்களின் வாழ்க்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையாக தன்னுடைய இசையையும் தன்னையும் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதை உணரும்போது அதிர்வாக உணர்வதாகவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு இசையே ஆன்மிகம் என்றும் ஆன்மிகமே இசை என்றும் கூறியுள்ள இளையராஜா, இதுவே நிதர்சனமான உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசைக்கச்சேரிகள்: சினிமாவில் இசையமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தாலும் வெளிநாடுகளில் அடுத்தடுத்த இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார் இளையராஜா. தற்போது சிங்கப்பூரில் இவரது இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் வீடியோக்களை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களை விருப்பத்தையொட்டி இந்த இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். கடந்த ஆண்டில் இவரது இளைய மகள் பவதாரணி உயிரிழந்த நிலையில், இசையில் அதிக கவனம் கொண்டதால் தன்னுடைய குழந்தைகளை தான் அதிகமாக கவனிக்கவில்லை என்று உருக்கம் தெரிவித்திருந்தார்.

பவதாரணி நினைவுநாள் நிகழ்ச்சி: இதனிடையே வரும் பிப்ரவரி 12ம் தேதி பவதாரணியின் திதி வருவதாகவும் அன்றைய தினமே அவரது பிறந்தநாளும் வருவதாகவும் கூறியுள்ள இளையராஜா அன்றைய தினம் தன்னுடைய மகளின் நினைவுநாள் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அதில் பல பாடகர்கள் இளையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் பயோபிக் படம் உருவாகவுள்ளதாகவும் அதில் லீட் கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கனெக்ட் மீடியாவுடன் ஏஜிஎஸ் நிறவனமும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X