அமெரிக்காவிலிருந்து ரிடர்ன்.. கோட்டு சூட்டுடன் ஜம்முன்னு வந்து இறங்கிய இளையராஜா!

சென்னை : இசைஞானி இளையராஜா இசைநிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

இதனிடையே சமீபத்தில் அவர் ராஜ்யசபா நியமன எம்பியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா 1400க்கும் மேற்பட்ட படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது பல பாடல்கள் காலத்தால் அழியாத அளவிற்கு சிறப்பான பாடல்களாக காணப்படுகின்றன. பலரது வாழ்க்கையில் இந்தப் பாடல்கள் பல சிறப்பான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.

அன்னக்கிளியில் துவங்கிய பயணம்

அன்னக்கிளியில் துவங்கிய பயணம்

1970களில் அன்னக்கிளி என்ற படத்தில் துவங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. அவர் 80 வயதை எட்டிய நிலையில், தற்போதும் அவரது உற்சாகம், எனர்ஜி சிறிதும் குறையவில்லை. அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

அமெரிக்காவில் இசைக் கச்சேரி

அமெரிக்காவில் இசைக் கச்சேரி

தொடர்ந்து இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பல இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் அவர் இசைக் கச்சேரிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார். அவர் சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பியாக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

வானதி ஸ்ரீனிவாசன், பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் அவரை விமானநிலையத்தில் வரவேற்று எம்பி நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான பாஜகவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். சில தினங்களில் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recommended Video

Aravindswamy | அரவிந்த்சாமிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு | Rewind Raja | *Kollywood
ராஜ்யசபா எம்பி

ராஜ்யசபா எம்பி

ராஜ்யசபா எம்பியாக இளையராஜா சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். பலரும் அவருக்கு தாமதமாக இந்த கௌரவம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X