ப்ளூ சட்டை மாறன் சொன்னது சரிதான்.. ஆனாலும் 3 BHK படம் பிடிச்சுருக்கு.. ஜேம்ஸ் வசந்தன் பாராட்டு!

சென்னை: இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் கடந்த 4ஆம் தேதி வெளியான படம் 3 BHK. சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, ரிது ரகுவந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் 3 BHK படம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது பதிவில், " எனக்கு Blue சட்டை மாறனின் விமர்சனம் பிடிக்கும். அதை ஏற்றுக்கொள்கிறேன் என்பது பொருளல்ல. அவர் எதைத் திட்டுகிறார், ஏன் திட்டுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட விமர்சகரும் தேவை. இவர் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு 'குபேரா' பார்த்தேன். அவர் சொன்னதெல்லாம் சரியாக இருந்தது; ஆனாலும் படம் எனக்குப் பிடித்தது.

'3BHK' படத்தை நேற்றிரவு பார்த்துவிட்டு இன்று அவர் விமர்சனத்தைப் பார்த்தேன். அவருடைய விமர்சனம் சரியாகத்தான் இருந்தது; ஆனாலும் இந்தப் படமும் எனக்குப் பிடித்திருந்தது. எல்லாரும் '3BHK' படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பது என் விருப்பம். புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆனால் நம்மை நாமே ஒருமுறை எட்ட இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் அதைப் பார்த்து கொஞ்சம் சுதாரித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதால்.

Music Director James Vasanthan Appreciates 3 BHK Movie And Blue Sattai Maran Review
Photo Credit:

மனநிறைவு: Depressing-ஆன (மனச்சோர்வை ஏற்படுத்தும்) படங்கள் எனக்கு பிடிக்காது. இந்தப்படம் ரொம்ப நேரமாக அந்த உணர்வைத் தந்ததால் சலிப்புடன் பார்த்தேன். ஆனால் மனநிறைவுடன் வெளியேற வைத்ததால் இதை எல்லாருக்கும் பரிந்துரைக்கிறேன். சோகத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக கதையில் வலுக்கட்டாயமாக சில சம்பவங்களை வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே இருந்தேன். நல்லவேளையாக அப்படி நிகழவில்லை. இந்த அச்சம் எல்லாருக்கும் இருந்திருக்கும் என்பதையும் நான் சரியாகவே யூகித்தேன். புன்னகையுடன் வழியனுப்பி வைத்தது மிகப்பெரிய ஆறுதல்.

அறிவாளி கதாநாயகி: Blue சட்டை எல்லா மசாலாப்பட விமர்சனங்களிலும் 'லூசு ஹீரோயின்' என்று ஒன்று சொல்வாரே, நினைவிருக்கிறதா? அதை மனதில் வைத்துக்கொண்டே இந்த இயக்குநர் இந்தப் பெண் கதாபாத்திரங்களை எழுதினாரோ என்பது போல இருந்தது. தெளிவான, அறிவாளியான, வீரமான பெண்களைப் பார்க்கும்போது ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. சித்தார்த் தங்கை கதாபாத்திரமும் அதற்கு உருவம் கொடுத்த நடிகையும் அருமை! சரியான தேர்வு!

சித்தார்த்: 46 வயதான சித்தார்த் 17-வயது பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் அப்படியே கச்சிதமாகப் பொருந்துகிறார். இது வேறு யாருக்கும் சாத்தியமே இல்லை. கம்ப்யூட்டர் மெய்நிகர் வேலைகள் செய்த பெரிய படமில்லை. எல்லாம் மெய். நடிப்பு அட்டகாசம். அவர் இணையாக நடித்த, அந்த எளிய பின்னணியில் வலம் வருகிற பெண் நடிப்பில் அப்படி ஒரு முதிர்ச்சி. யார் இவர்? அந்தக் குடும்பம் கடந்துபோகிற ஒவ்வொரு சூழலையும் நாம் எல்லோருமே கடந்தவர்கள் அல்லது கடந்துகொண்டிருக்கிறவர்கள் என்பதால் அரங்கில் அப்படி ஒரு அமைதி - மனதுக்குள் விசும்பிக்கொண்டு; அதை நிரூபிக்கும் வண்ணம் சில இடங்களில் கைத்தட்டல் வேறு.

இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம்: தமிழ்ப்பட கதாநாயகன் ஆயகலைகளிலும் சிறந்தவன் என்பதுதான் காலங்காலமாக நாம் பார்த்தது. இவன் ஏட்டறிவு எட்டாத மக்கு என்பதும் அரங்கில் பலருடைய ஆதரவுக்குக் காரணம். "A student's IQ is not directly correlated with their academic success" என்பதன் எளிமையான வெளிப்பாடு பாராட்டப்பட வேண்டிய அம்சம். இந்தப் படத்துக்கு கூடுதல் ஆதரவு அரங்கில் இளம் பார்வையாளரிடம் கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பாடல்களும் பின்னணி இசையும் அருமை. இளைஞருக்கு நவீனமாக இசையைக் கொடுக்கிறேன் என்கிற பெயரில் படத்தின் தன்மையுடன் ஒட்டாத இசையை அண்மையில் பல படங்களில் கேட்டுவிட்டு, மனதிற்குள் பாய்கிற இதமான நம்ம பாணியுடன் கலந்த புதுமை மிகப்பெரிய ஆறுதல். அவர் யார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு புதுப்பெயர் திரையில் தோன்றியது. நல்ல எதிர்காலம் உண்டு இவருக்கு.

Music Director James Vasanthan Appreciates 3 BHK Movie And Blue Sattai Maran Review
Photo Credit:

கொடுத்துவைத்த தலைமுறை: ஆனாலும் படத்தின் இறுதியில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், புதிய வீட்டுக் கதவின் கைப்பிடியை close-up shot-ல் சரத்குமார் பிடித்துத் திறக்க, உள்ளிருந்து கேமரா அவர் உள்ளே நுழைவதைக் காட்டும்போது உணர்வுபூர்வமாக ஒரு இசை பிரவாகித்து வர எதிர்பார்த்து என்னுடைய மனம் என் இளையராஜாவை அவ்வளவு தேடியது.'காதலுக்கு மரியாதை' இறுதிக்காட்சி இசையை நான் என் மனதுக்குள் ஓடவிட்டு கற்பனையில் அதை ரசித்துக் கொண்டேன். அதெல்லாம் இந்தத் தலைமுறைக்கு சாத்தியமில்லை என்பதையும் அறிவேன். என்ன செய்வது... நான் கொடுத்துவைத்த தலைமுறையைச் சேர்ந்தவனாயிற்றே! ஒருமுறை இந்தப் படத்தைப் பார்த்துவிடுங்கள்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X