திருந்த நினைக்கிறவங்களுக்கு.. வெற்றி மாறன் சிக்ரெட் பிடிச்ச கதை ரொம்ப முக்கியம்.. ஜேம்ஸ் வசந்தன் பளிச்!

சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை தமிழ் அரசியல் சூழல் உள்ளிட்ட பலவற்றில் தனது கருத்துக்களை மிகவும் தைரியமாக சொல்லிக் கொண்டு உள்ளார். மேலும் பல விஷயங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கு இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை சொன்னாலும் அவற்றில் மிகவும் முக்கியமான கருத்துக்களுக்கு சரியான பதில் கருத்துக்களையும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தும் வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெற்றி மாறனின் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்தும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அதற்கு வந்த கமெண்ட்க்கு மிகவும் அட்டகாசமாக பதிலையும் கொடுத்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன், ஒரு காலகட்டம் வரை மிகவும் அதிகப்படியான சிக்ரெட் புகைப்பவராக இருந்துள்ளார். அதாவது, ஒரு நாளைக்கு சுமார் 150 சிக்ரெட்கள் முதல் 180 சிக்ரெட்கள் வரை புகைத்துள்ளார். குறிப்பாக வெற்றிமாறன் தனது உதவியாளர்களிடம் சிக்ரெட் வாங்கி வைத்துக் கொள்ளச் சொல்வாராம். ஒரு நாளைக்கு 10 முதல் 15 பாக்கெட்டுகள் வரை சிக்ரெட்டை வெற்றி மாறன் புகைத்து விட்டால், அவரது உதவியாளார்கள் எச்சரிப்பார்களாம். எத்தனை பாக்கெட் ஆகியுள்ளது எனக் கேட்ட பின்னர் 15 பாக்கெட்டுகள் தீர்ந்துவிட்டது எனக் கூறினால், மேலும் இரண்டு மூன்று சிக்ரெட் பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளச் சொல்லுவாராம்.

Music Director James Vasanthan Face Book Post About Vetrimaran Smooking Habit

புகைப் பழக்கம்: இப்படி இருந்த வெற்றிமாறன் ஒரு கட்டத்தில் அதிகப்படியான புகைப்பிடிக்கும் பழக்கத்தால் சில உடல் உபாதைகளை எதிர் கொள்ள ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை. அதன் பின்னர் மருத்துவரைச் சந்தித்து, சில பரிசோதனைகள் எல்லாம் மேற்கொண்ட வெற்றி மாறன் அதன் பின்னர் தனது புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முற்றிலும் கைவிட்டுவிட்டார். வெற்றி மாறன் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூட தெரிவித்துள்ளார். அதாவது, தான் 'சைன் ஸ்மோக்கர்' என்றும் அதன் பின்னர் புகைப்பிடிப்பதை விட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

மனம் திருந்திய வெற்றி மாறன்: இந்நிலையில் வெற்றி மாறனின் புகைப் பழக்கத்தில் இருந்தது அதன் பின்னர் அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தித் துணுக்கு அடங்கிய செய்தித் தொகுப்பு அடங்கிய முகநூல் பக்க பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு முகநூல் வாசி ஒருவர், வெற்றி மாறனை மோசமாக விமர்சித்து விட்டு, இப்போது வெற்றி மாறன் சிக்ரெட் பிடித்த கதை எல்லாம் இப்போது ரொம்பவும் முக்கியமா? என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஸ்டைலில் பதில் கொடுத்துள்ளார்.

நச் ரிப்ளை: அதாவது, " ஆம், தம்பி. ரொம்ப முக்கியம் தான். இது சிந்திக்கும் திறன் கொண்ட, திருந்த நினைக்கிற பலருக்கும் முக்கியந்தான்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வெற்றி மாறன் தற்போது சிம்புவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் வாடி வாசல் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X