ஜேம்ஸ் வசந்தனிடம் திருட முயற்சி.. நொந்து போன நூதன திருடன்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் நூதன திருடன் ஒருவர் ஆன்லைனில் திருட முயற்சி செய்துள்ளார். போன் கால் மூலம் நடைபெற்ற இந்த திருட்டு முயற்சியை, ஜேம்ஸ் வசந்தன் கண்டுபிடித்துவிட, அதன் பின்னர் திருட்டை எப்படி அந்த திருடனையே கலங்க வைத்தார் என்பதுதான் ஹைலைட். இது தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

அவரது முகநூல் பதிவில், " ஒரு மணி நேரம் முன்பு தெரியாத எண் ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
"ஹல்லோ"
"சார், -------- எனும் எண் உங்க எண்தானே?"
"ஆம்."
"நான் பெங்களூரு Mnistry of Telecommunicaiton-லருந்து பேசுறேன். ஒங்க பேர் ஜேம்ஸ் வசந்தன்தானே?"
"ஆம்."
"நீங்க பெங்களூருலருந்து உங்க எண்ணை பயன்படுத்தி ஒரு illegal information குடுத்துருக்கிங்க. உங்க நம்பர் பதிவாகியிருக்கு. அதனால உங்க எண்ணை block/freeze பண்ணப்போறோம்."
"சரி"
"அதனால உங்க ID-ஐயும் நீங்க lose பண்ணப்போறீங்க".
"சரி"

"பண்ணுறதுக்கு முன்னாடி உங்களுக்கு inform பண்ணத்தான் call பண்ணிருக்கோம்"
- அப்படின்னு ஒரு நல்ல வசீகரமான குரல். 35 வயதிருக்கலாம். நல்ல தமிழ், நல்ல இங்லிஷ். நல்ல பள்ளி/கல்லூரியில் நன்கு படித்த ஒருவனின் குரல்.
நான் சொன்னேன்.
"பரவாயில்ல, என் நம்பரை block/freeze பண்ணிக்கோங்க, நான் வேற நம்பர் வாங்கிக்குறேன்"
"அது வாங்கிக்கலாம், ஆனா you will lose your identity."
"நான் உயிரோடத்தானே இருக்கேன். இன்னொரு ID வாங்குறது ஒண்ணும் கஷ்டமில்லயே. வாங்கிக்குறேன்."
"அதுக்கு ஐந்தாறு மாசம் ஆகும், ரொம்ப கஷ்டமான process."

Music Director James Vasanthan Facebook Post About Thief Who Try To Online Fraud

"சரி, அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க இவ்வளவு அறிவோட அழகா பேசுறிங்க. இதுல செலவு பண்ற அறிவையும் உழைப்பையும் ஒரு வேலையில காட்டுனா நல்லா சம்பாதிக்கலாமே... எதுக்கு இந்த திருட்டுப் பிழைப்பு?"
"என்ன சார் திருட்டு வேலை?"
"இப்போ நீங்க பண்றது திருட்டு வேலைதான?"
"எப்படி சொல்றிங்க?"
"இப்போ இந்தக் காலை அப்படியே நான் Chennai Cyber Crime-க்கு connect பண்றேன். Genuine call-ன்னு சொன்னாங்கன்னா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். திருட்டு வேலைன்னா இதையெல்லாம் விட்டுட்டு திருந்திடுறியா?
அமைதி மறுமுனையில்.

"இந்த நேரத்தை நேர்மையான விதத்துல செலவழிச்சி எங்களை மாதிரி கவுரவமா வாழலாமுல்ல?"
"நீங்க ஜேம்ஸ் வசந்தன்தான... எனக்கு நீங்க யாருன்னு தெரியும்."
"அதெல்லாம் இருக்கட்டும். நானும் உழச்சிதானப்பா சம்பாதிக்கிறேன்."
"இந்த அரசாங்கங்கள் எல்லாம் சரியாவா இருக்கு? எங்க வேலை குடுக்குது? நாங்க என்ன பண்றது பணத்துக்கு?"
"அரசாங்கம் சரியா இல்லன்னா திருடத் தொடங்கிடுவியா? இப்படி ஏமாத்தி சம்பத்திக்கிற பணத்தைப் போய் உன் பெற்றோர்கிட்டயோ, மனைவிகிட்டயோ என்ன மனசாட்சியோட கொடுப்ப?"

"நானும் பலவிதத்துல முயற்சி பண்ணிட்டேன். எனக்கு எதுவுமே நடக்கல, கிடைக்கல."
"என் பக்கத்து வீட்டுல சும்மா அந்த வீட்டைப் பாத்துக்குற பீஹார் இளைஞனுக்கு 40,000 ரூபாய் சம்பளம். சமைக்கிற அவன் மனைவிக்கு 25,000. மாதாமாதம் 50,000 ரூபாயை அவன் சொந்த ஊருல இருக்குற வங்கியில போட்டு சேத்துக்குட்டு வரான். சீக்கிரத்துல சொந்த வீடு கட்டப்போறேன் அப்படின்றான். இவ்வளவு படிச்ச ஒனக்கு ஒரு வேலை கிடைக்காதுன்றியா. திருட்டை ஏத்துக்குற ஒன் மனசு சின்ன வேலை செய்ய அனுமதிக்காதா?"
"ஒண்ணுமே நடக்கல சார் எனக்கு!"

Music Director James Vasanthan Facebook Post About Thief Who Try To Online Fraud

"என் நம்பர் உங்கிட்ட இருக்கு. என் வீட்டு முகவரி தர்றேன். நேர்ல வா. ஒக்காந்து பேசுவோம். பலவழிகள் இருக்கு. நான் ஒனக்கு சிலது சொல்றேன். அதுக்கேத்த சில உதவிகளையும் நானே செய்றேன். வா ஒரு நாள்."
"எனக்கு உங்க வீடு எங்க இருக்குன்னு தெரியும். வடபழனிதானே?" என்று தவறாகச் சொன்னான்.
"நான் இன்னிக்கு சொன்னதக்கேட்டு நீ உடனே திருந்திடப் போறதுல்ல. ஆனால் நேர்மையா பிழைக்க வழி இருக்குன்னு நான் சொன்னதை நீ மறுக்கமாட்டேன்னு எனக்குத் தெரியும்" அமைதி. "உன் அழைப்புக்காகக் காத்திருப்பேன்!" "Thank you, sir." இவ்வாறு பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X