பா. ரஞ்சித் பெயரைக் குறிப்பிடாமல் சினிமாவுக்குள் சாதி! என்னங்க இந்த இசையமைப்பாளர் இப்படி பேசீட்டாரு!
சென்னை: தமிழ் சினிமாவை இயக்குநர் பா. ரஞ்சித்க்கு முன், பா. ரஞ்சித்துக்குப் பின் என பிரித்துப் பார்க்கவேண்டும் என பேசியவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர் இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எடுக்கப்பட்ட படங்கள் பெரும்பாலானவற்றில் அவர்களைக் காக்கும் தலைவர் மாற்று சமூகத்தில் இருந்து வருபவரைப் போலத்தான் காட்டப்பட்டது. சமீபத்தில் வெளியான கழுவேர்த்தி மூக்கன் படத்திலும் கூட இப்படியான கதையம்சம் கொண்ட படமாகத்தான் இருந்தது.
ஆனால் பா. ரஞ்சித் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர்கள் அவர்களில் ஒருவராக அவர்களில் இருந்தே வருவதைப் போல படமாக்கி வருகின்றார். இதுமட்டும் இல்லாமல் சமூகத்தை முற்போக்காக வழிநடத்தும் சித்தாந்தம் என தான் நம்பும் சித்தாந்தத்தையும் படங்களில் காட்சிகளாகவோ, குறியீடுகளாகவோ அல்லது வசனங்களாகவோ காட்சிப் படுத்துக்கின்றார்.

மேலும் இந்த படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என நிரூபித்தும் வருகின்றார். இதன் காரணமாகவே வெற்றி மாறன் தமிழ் சினிமாவை பா. ரஞ்சித்துக்கு முன், பின் என பிரிக்கலாம் என கூறுகின்றார். தனது சினிமாக்களால் முத்திரை பதித்து வந்த வெற்றி மாறன் அசுரன் போன்ற படத்தினை இயக்கி மகுடம் சூடிக்கொண்டார். இவர்கள் வரிசையில், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களும் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்களும் வெளியாகி வெற்றியும் பெறுகின்றது.
தங்கலான்: தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவேது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படம் கோலார் தங்கவயல் தொடர்பாக படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு டப்பிங் எதுவும் இல்லாமல் லைவ் சவுண்ட் ரெக்கார்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. இம்முறையை ஏற்கனவே ரஞ்சித் தனது நட்சத்திரம் நகர்கின்றது படத்திலும் பின்பற்றினார்.

சினிமாவுக்குள் சாதி கிடையாது: இந்நிலையில் பா.ரஞ்சித் பெயரைக் குறிப்பிடாமல், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதில், " சினிமாவில் முன்பெல்லாம் சாதியே கிடையாது. சினிமாவுக்கு சாதியே கிடையாது. ஆனால் தற்போது சினிமாவிற்குள் சாதி வருவதைப் பார்க்க முடிகின்றது. சில இயக்குநர்கள் தனது அலுவலகத்தில் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற தகவலைக் கேட்கும்போது வருத்தமாக இருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு: இதுவரை சாதி, மதம் பார்க்காத ஒரு துறை என்றால் அது திரைப்படத்துறை. ஆனால் அதற்குள்ளே கூட சாதியைக் கொண்டு வந்துவிட்டார்களே என்பது வருத்தமாக இருக்கு. சிலர் என்னசொல்கின்றார்கள் என்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு மறுகப்படும்போது அவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்கின்றோம் எனக் கூறுகின்றனர். அதாவது அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது, அதனால் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றோம் என்கின்றனர். அவ்வாறு வாய்ப்பு கொடுத்தால் மகிழ்ச்சி" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











