உதவியாளர் எல்லாம் இல்லை.. இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் என்ன தொடர்பு.. விபரத்தை சொன்ன ஜேம்ஸ் வசந்தன்!

சென்னை: தமிழ் சினிமாவில் சில உருட்டுகள் உலா வருவது வாடிக்கைதான். சில கிசு கிசுக்கள் நம்ப முடியவில்லை என மறுத்து வரும்போது அது உண்மை என ஒரு குண்டு வந்து விழும். சில கிசு கிசுக்களை பரப்புகிறவர்கள் அதனை உண்மை போலவே சொல்லிவிடுவதால் அதனை திரையுலகம் மட்டுமில்லாமல் ரசிகர்களும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி நம்பிக் கொண்டு இருந்த ஒரு விஷயம் இசைஞானி இளையராஜாவிடம் ஏ.ஆர் ரகுமான் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார் என்பதுதான். இது தொடர்பாக பலரும் பலவிதமாக தங்கள் மனம் போகிற போக்கில் கதைகளை கட்டவிழித்து விட்டுள்ளார்கள். இந்த கட்டுக் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு அமைந்துள்ளது.

அதாவது அவரது பதிவில், " ஏ ஆர் ரஹ்மான் இளையராஜவிடம் உதவியாளராக பணிபுரிந்தார் என்ற செய்தியைப் பகிரும் சில காணொலிகளை அண்மையில் சமூக ஊடகங்களில் பார்த்தேன். இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு தகவல். முதலில் இளையராஜா போன்ற ஒருவருக்கு உதவி இசையமைப்பாளர் என்பவரே தேவையில்லை என்பதை அறிவீர்கள். எங்கெல்லாம் அவருக்கு உதவினார்கள் என்பதை சிலர் அறிந்திருக்கலாம். அன்றைய பாடல் பதிவுக்கு தேவைப்படுகிற இசைக்கருவிகள் மற்றும் பாடகர்களை ஏற்பாடு செய்கிறவர் (Arranger), அவர் எழுதுகிற இசைக் குறிப்புகளை எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பவர், பதிவின்போது கூடத்துக்குள் நின்று இசைக் குழுவினரை நடத்துபவர் (Conductor) என இவர்கள்தான் அவர் உதவியாளர்கள்.

Music Director James Vasanthan Put Full Stop For Rumour AR Rahman is Assistant of Ilayaraja

இளையராஜாவும் ரகுமானும்: இந்த நடத்துனர் பணியை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கலைஞர்கள் செய்திருக்கின்றனர் - கோவர்த்தனம், நரசிம்மன் தொடங்கி தினா வரை. Drums கலைஞர் புருஷோத்தமன் அவருடைய குழுவைச் சேர்ந்த நடத்துனர். நிரந்தரமாக அவரிடம் இசைக்கருவிகள் வாசித்த இசைக் கலைஞரும் உண்டு, அவ்வப்போது வந்து போகிற கலைஞரும் உண்டும்.

100 படங்கள்: விஜி மானுவேல், புருஷோத்தமன், குணசிங், சுதாகர், சந்தானம், சசி, நெப்போலியன் (அருண்மொழி), சபேஷ், முரளி, சிவா, பரணி அவருடைய ஆஸ்தான கலைஞரில் சிலர். ரஹ்மான் (Keyboards), சிவமணி (Drums) போன்று அவ்வப்பொழுது வந்து போகிற கலைஞர் பலர் உண்டு. ரஹ்மான் இசைக் கம்ப்யூட்டர் வாங்கிய முதல் இசைக்கலைஞன் என்பதால் அவர் அந்த கட்டத்தில் அழைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் (சுமாராக 100 படங்கள்) இளையராஜாவின் பாடல் பதிவுகளில் பணிபுரிந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வன்ம குடோன்கள்: இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த பதிவு பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இவரது இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். முகநூல் வாசி ஒருவர், " இளையராஜா இசைஞானி என்பதில் இருவேறு கருத்தில்லை, ஆனால் ஏ.ஆர் ரகுமானை அவருக்கு கீழ் என்று பிரகடனப்படுத்த பரப்பப்படும் வதந்திகளில் முதன்மையானது அவர் உதவியாளர் என்ற இந்த பொய்" என கமெண்ட் அடித்துள்ளார். அதேபோல் மற்றொருவர் , " என்ன இன்னைக்கு கமெண்ட் செக்சன் ரொம்ப சாதாரணமா போயிட்டு இருக்கு.. வன்மகுடோனெல்லாம் லீவுல இருக்காங்களா..இப்பதான் நல்லா இருக்கு" என பதிவிட அதற்கு ஜேம்ஸ் வசந்தனோ, அவையெல்லாம் நீக்கப்பட்டுவிட்டன" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X