ஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை!

சென்னை: பிக்பாஸ் டைட்டிலை ஆரி வென்றது குறித்து பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Aari யின் வெற்றியை பாராட்டிய Bigg Boss போட்டியாளர்கள் - Filmibeat Tamil

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து பிரபல இசையமைப்பாராள ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ஹவுஸ்மேட்ஸ் செய்யும் தவறுகளை தோலுரித்தும் நல்ல விஷயங்களை பாராட்டியும் வந்தார். அந்த வகையில் அர்ச்சனாவின் அன்பு அட்ராசிட்டி, பிக்பாஸ் வீட்டில் நடந்த கட்டிப்பிடி களேபரங்கள் என பலவற்றையும் பேசினார்.

ரியோவின் உண்மை முகம்

ரியோவின் உண்மை முகம்

ரியோவின் உண்மை முகம் இதுதான் என்று கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் அவர் காணாமல் போயிருந்ததையும் குறிப்பிட்டிருந்தார். இதேபோல் ஆரியின் நேர்மை கண்ணியம் பொறுமையும் பாராட்டி பதிவிட்டு வந்தார்.

ஹேப்பியான ஜேம்ஸ்

ஹேப்பியான ஜேம்ஸ்

ஆரியின் முதிர்ச்சியான நடவடிக்கைகளை பார்த்து நீ எப்படிடா இப்படி வளர்ந்த என்றும் பிரமிப்புடன் கேட்டு வந்தார். இந்நிலையில் நேற்று ஆரிதான் டைட்டில் வின்னர் என்றதும் செம ஹேப்பியாகிவிட்டார் ஜேம்ஸ் வசந்தன்.

நிம்மதியாய் உறங்கு

நிம்மதியாய் உறங்கு

நேற்றிரவு ஆரி வின்னர் என்று அறிந்ததுமே இதுதொடர்பாக தனது ஃபேஸ் புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ். அதாவது, தமிழுலகமே இன்றிரவு நிம்மதியாய் உறங்கு.. நேர்மை தோற்காது.. நல்லதுக்கு காலம் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

தர்மம் நின்று கொன்றது

தர்மம் நின்று கொன்றது

மற்றொரு பதிவில், ஆரி ஒரு மாரி, ஆரி ஒரு அறுவை என்று பாடியவர்கள், ஆரி ஒரு அம்பி, ஆரி நீங்க ஒரு பேக்கு, இவனெல்லாம் ஒரு ஆளா அப்படின்னு சொன்ன எல்லாரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது ஆத்ம திருப்தியைக் கொடுத்தது. தர்மம் நின்று கொல்லும்! கொன்றது.. என குறிப்பிட்டுள்ளார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் நீங்கள் சொல்வது சரிதான் என்றும் பதிவிட்டு வருகின்றனர். லைக்ஸ்களையும் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X