அப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா? ரியோவை தோலுரிக்கும் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ நடிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது என விளாசி விட்டிருக்கிறார் பிரபல இசையமைப்பாளர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரியோ, குரூப்பிஸம் இல்லை இல்லை என்று கூறிவிட்டு அன்பு கேங் என அர்ச்சனா தலைமையில் விளையாடி வந்தார்.

அர்ச்சனா வெளியே சென்ற பிறகு, சோம், கேபியுடன் சேர்ந்து அவர்கள் மூன்று பேர் மட்டும் ஒரு கேங்காக இருந்து வந்தனர். அன்பை வெளிப்படுத்துகிறேன் என அவ்வப்போது ரியோ சக பெண் ஹவுஸ்மேட்ஸ்களை கட்டிப்பிடித்து வருகிறார்.

கட்டிப்பிடி வைத்தியர்

கட்டிப்பிடி வைத்தியர்

சண்டை என்றாலும் சமாதானம் என்றாலும் உடனே கட்டிபிடித்து விடுகிறார் ரியோ. இதனால் அவரை குட்டி சினேகன், கட்டிப்பிடி வைத்தியர் என்றும் கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

நிஜமற்றது என நிரூபணமானது

நிஜமற்றது என நிரூபணமானது

இந்நிலையில் ரியோவின் உண்மை முகம் இதுதான் என கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ரியோவின் பேச்சும், சிரிப்பும், ஆட்டமும், பாட்டமும் எவ்வளவு நிஜமற்றது என்று கடந்த 2 நாட்களாக நிரூபணமானது.

அத்தோடு பதுங்கியவர்தான்

அத்தோடு பதுங்கியவர்தான்

மூன்று நாட்களுக்கு முன், சற்று ஒதுங்கி அமைதியாயிருந்த ஆரியிடம் வலியச் சென்று "இன்னும் மூன்று நாள்தான் ப்ரோ, சகஜமா ஜாலியா இருங்க, எல்லாரோடயும் சேருங்க ப்ரோ" என்று தோரணையுடன் அட்வைஸ் பண்ணிவிட்டு அத்தோடு பதுங்கியவர்தான், இன்னும் அவரைக் காணாமல் எல்லாரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மூஞ்சிய பார்கக சகிக்கல

மூஞ்சிய பார்கக சகிக்கல

நேற்று நிஷா அவரை "ஏண்டா இப்புடி இருக்க? உன் மூஞ்சியப் பாக்க சகிக்கல" என்று பார்வையாளர்கள் எல்லார் சார்பிலும் கேட்டது நமக்கு ஆறுதலாயிருந்தது. கேபியை ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் அணைத்து, அரவணைத்து தன் பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தவர், அவர் 5 லட்ச பெட்டியை எடுத்துவிட்டார் என்றவுடன் அதைத் தனக்குத் தந்துவிடும்படி கெஞ்சிக் கூத்தாடி, எமோஷனல் பிளாக்மெயில் செய்து, போராடியும் பார்த்துத் தோற்று அடங்கிப்போனார்.

நொந்து போகும் ரியோ

நொந்து போகும் ரியோ

அந்த அன்பும், உறவும் எங்கே போனது?
ஞாயிறு நிகழ்ச்சியில் ஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கைப் பார்த்து கைதட்டப் போகிற நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் நினைத்து நினைத்து நொந்துபோவதைப் பார்க்கமுடிகிறது.

சிரித்துக்கொண்டே போயிருப்பேன்

சிரித்துக்கொண்டே போயிருப்பேன்

அதனால் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தார். அதுவும் மணல்கோட்டையானது!அதனால்தான் நிஷாவிடம் சொன்னார், "எவிக்ட்டாகிப் போயிருந்தால் கூட சிரித்துக்கொண்டே போயிருப்பேன்" என்று. பார்வையாளர்கள் இதனை நீண்ட நாட்களுக்கு முன்பே கணித்திருந்தனர்!" இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X