விட மாட்டேங்குறானே.. நீ எப்படிடா இப்படி வளர்ந்த? ஆரியை பார்த்து பிரமிக்கும் பிரபல இசையமைப்பாளர்!
சென்னை: பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் ஆரி குறித்து ஷேர் செய்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
கடந்த பிக்பாஸ் சீசன்களை போல இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கும் ஏராளமான பிரபலங்கள் ரசிகர்களாக உள்ளனர்.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளராள ஜேம்ஸ் வசந்தனும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான தனது கருத்துக்களை ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

காஸிப் முதல் கட்டிப்பிடி வரை
ஹவுஸ்மேட்ஸின் காஸிப் முதல் கட்டிப்பிடி வரை அனைத்தையும் பிரித்து மேய்ந்து வருகிறார். அதேபோல் ஹவுஸ்மேட்ஸ் பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவுகளையும் அவ்வப்போது தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தோலுரித்து வருகிறார்.

ஆரி குறித்து பதிவு..
அந்த வகையில் ஆரியை பாராட்டி அடிக்கடி எழுதி வருகிறார் ஜேம்ஸ் வசந்தன். இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நீங்கள் ஆரியின் சப்போர்ட்டரா என கேட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஆரி குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

விடமாட்டேங்குறானே..
அவர் பதிவிட்டிருப்பதாவது, "பிக்பாஸ்.. இவனப்பத்தி எழுதுனது போதும்னு நெனச்சாலும் விடமாட்டேங்குறானே! வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் உள்ள வந்துட்டாங்க. பாலாவுக்கு இருப்புகொள்ளல. எல்லார்கிட்டாயும் ஒக்காந்து ஒக்காந்து கேக்குறாரு.. "வெளிய என்னப்பத்தி என்ன நெனக்கிறாங்க.. பாஸிட்டிவா நெகட்டிவா.. பேரு ரொம்ப கெட்டுப்போச்சா.. ஆரியப்பத்தி என்ன சொல்றாங்க?" அப்படின்னு தவிக்கிறாரு.

நல்லதங்காளுக்காத் தெரியாது?
அந்தப் பாசக்குடும்பத்தப் பத்தி சொல்லவே வேணாம். நமக்கு எதுவும் காட்டப்படல. ஆனா அத எப்ப எப்படி தன்னோட பிள்ளைகளுக்குச் சொல்லணும்னு நல்லதங்காளுக்காத் தெரியாது? எல்லாம் சொல்லிருக்கும். இந்த மனுஷன் அமைதியா ஒக்காந்துருக்கான். எதப்பத்தியும் கவலப்படல.

நீ எப்படிடா வளர்ந்த?
அதை சொல்லத்தொடங்குன நிஷாவையும், "எனக்கு எதுவும் சொல்லவேணாம். நல்லதும் வேணாம், கெட்டதும் வேணாம். அது எனக்கும் நல்லதுல்ல.. மத்தவங்களுக்கும் நியாயமா இருக்காது" அப்படின்னுட்டான்.. என ஆரி குறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், நீ எப்படிடா இப்படி வளந்த? என்று வியப்புடன் கேட்டு முடித்துள்ளார்.

நேசிக்க தொடங்கிவிட்டோம்
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆரியின் சுய ஒழுக்கத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர் ஆரியுடன் சேர்த்து உங்களையும் நேசிக்க தொடங்கிவிட்டோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











