M. S. Viswanathan: ஏழு ஸ்வரங்களின் நாயகன் எம்.எஸ் விஸ்வநாதனின் பிறந்த நாள் இன்று!

சென்னை: மெல்லிசை மன்னன் எம்.எஸ் விஸ்வநாதனின் 96வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒன்றுதான் பாட்டு. இன்பம், துன்பம் என எதுவந்தாலும் உயிரோடு ஒன்றாக கலந்து விட்டது பாட்டு.

பாட்டுகள் இல்லாத தமிழ் சினிமாவை எள்ளளவு கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. அப்படி செவிக்கு விருந்தாக அமைந்த பல பாடல்களை கொடுத்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.

Music director M. S. Viswanathan Birthday special round up

எம்.எஸ்.விஸ்வநாதன்: மெல்லிசை மன்னர் என்று பெயரெடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1928ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர். இந்திய அளவில் மிகப்பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் புகழ் பெற்று விளங்கியவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர் 1953 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் பணம் என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார்.

நல்ல வரவேற்பு: இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் சுமார் 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். இவருடைய பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றன.

Music director M. S. Viswanathan Birthday special round up

எழுதப்படாத விதி: எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் பாடல்கள் என்றால், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. அதேபோல் தனது திரை பயணத்தில் தனது சமகால இசையமைப்பாளர்களை தாண்டி இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் என இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடியிருக்கிறார்.

உயிரிழந்தார்: கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என பல விருதுகளை வாங்கிய எம்எஸ்விக்கு தேசிய விருது கிடைத்ததில்லை என்பது சற்று அதிர்ச்சியான தகவல் தான். இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன், 1998 முதல் 2013 வரை படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 27 ஜூன் 2015 அன்று, விஸ்வநாதன் சென்னையில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் மூச்சுத் திணறால் உயிரிழந்தார்.

96வது பிறந்த நாள்: தனது இசையால் பல ரசிகர்களை கட்டிப்போட்ட எம்.எஸ்.வி மறைந்து இருந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரின் 96வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து அவர் இசையமைத்த பாடல்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X