இசையமைப்பாளர் மணிசர்மாவிற்கு இன்று பிறந்தநாள்.. ஹேப்பி பர்த்டே சார் !
சென்னை : தளபதி விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த மணிசர்மா தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
Recommended Video
தெலுங்கில் பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ள நிலையில் தமிழில் விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்திற்கு இசையமைக்க தொடர்ந்து இன்று வரை பல படங்களுக்கு தனது துள்ளிசையை கொடுத்து வருகிறார்.
இவ்வாறு தனது இசையின் மூலம் நம் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்த இசையமைப்பாளர் மணிசர்மா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

கொடிகட்டி பறந்து
தமிழில் வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ராஜ்குமார் என பல வெற்றி இசையமைப்பாளர்கள் பிஸியாக பல வெற்றி படங்களில் இசையமைத்து வந்த நிலையில் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றிகரமாக வலம் வந்த இசையமைப்பாளர் மணிசர்மா தமிழில் அறிமுகமாகி இங்கும் தனது இசையின் மூலம் கொடிகட்டி பறந்து வந்தார்.

நரசிம்மா படத்தின்
இவரின் துடிப்பான இசையின் மூலம் வெற்றிப் பாடல்கள் பல கொடுத்து அந்த படங்கள் பலராலும் அறியப்பட்டு வெற்றியடைந்துள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு, சிரஞ்சீவி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த மணிசர்மா தமிழில் முதன் முறையாக விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தின் மூலம் தமிழ் படங்களில் இசையமைப்பாளராக களமிறங்கினார்.

அதிரடி இசையின் மூலம்
இவ்வாறு அதிரடியாக தமிழில் இறங்கிய மணிசர்மா தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் சொல்லி வைத்ததுபோல் கில்லி மாதிரி இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர் தமிழில் இசையமைத்த பிரபலமான படங்களான போக்கிரி, திருப்பாச்சி, படிக்காதவன், மலைக்கோட்டை உட்பட பல படங்களுக்கு இவர் தனது அதிரடி இசையின் மூலம் அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர்
தமிழிலும் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த இசையமைப்பாளர் மணிசர்மா தெலுங்கில் வெளியான போக்கிரி, ஒக்கடு, குஷி, பில்லா என பலநூறு வெற்றி படங்களுக்கு இசையமைத்து இன்றும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

குத்தாட்டம் போட
இவ்வாறு தனது இசையின் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழி மக்களையும் குத்தாட்டம் போட வைத்து வரும் மணிசர்மா இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். ஜூலை 11 ஆம் தேதியான இன்று இவர் தனது 56 ஆவது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருவதையொட்டி இவரின் இசையின் மூலம் புத்துணர்ச்சி பெற்ற ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











