பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்.. தென்னிந்திய இசைக்கலைஞர்கள் அஞ்சலி!
சென்னை: சோனியா அகர்வாலின் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் நாகேஷ்வர் ராவ் என்கிற ஆதிஷ் காலமானார்.
இயக்குநர் ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் நாகேஷ்வர் ராவ் என்கிற ஆதி.

இவர் தேள், மவுனமழை உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆதிஷ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் தீனா, இசையமைப்பாளர் கண்மணிராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Comments


Click it and Unblock the Notifications