Anirudh: ட்ரெண்டிங்கில் தலைவர் நிரந்தரம்.. ஷேர் செய்த அனிருத்.. நெல்சனுக்கும் பாராட்டு!

சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

சர்வதேச அளவில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Music director of Jailer movie Anirudh shares the trending hashtag Thalaivar Nirandharam in his twitter page

அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. காவாலா பாடல் 100 மில்லியன் வியூசை கடந்துள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ள தலைவர் நிரந்தரம் வாசகத்தை பகிர்ந்த அனிருத்: நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். ரஜினியின் கடந்த சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வசூலிலும் சாதனை புரிந்தது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர்.

Music director of Jailer movie Anirudh shares the trending hashtag Thalaivar Nirandharam in his twitter page

இந்தப் படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. படத்தில் ரஜினியின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் பாதி மரண மாஸாக உள்ளதாகவும் இரண்டாவது பாதி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் படத்திற்கான விமர்சனங்களாக கொடுத்துள்ளனர். படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் அனிருத்தின் இசை பின்புலமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். கடத்தப்பட்ட தன்னுடைய மகனை மீட்பதற்காக ரஜினியின் முயற்சியை கதைக்களமாக இந்தப் படம் கொண்டுள்ளது.

இந்தப் படத்தில் அனிருத் இசையில் அடுத்தடுத்த 4 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீடும் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற ரஜினியின் பேச்சும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைந்தது. விழாவில் அவர் சொன்ன காக்கா -பருந்து கதை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் இந்தக் கதைக்கு கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

Music director of Jailer movie Anirudh shares the trending hashtag Thalaivar Nirandharam in his twitter page

சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு எப்போதுமே ரஜினிதான் பொருத்தமானவர் என்பதை ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இதையடுத்து ட்விட்டரில் ரஜினிகாந்த், ஜெயிலர், ஜெயிலர்FDFS மட்டுமில்லாமல் தலைவர் நிரந்தரம் என்ற ஹேஷ்டேக்கும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்து வருகின்றனர்.

Music director of Jailer movie Anirudh shares the trending hashtag Thalaivar Nirandharam in his twitter page

இந்நிலையில் ஜெயிலர் படத்தை திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தன்னுடைய இசைக் கச்சேரியையும் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இதையடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தலைவர் நிரந்தரம் வாசகத்தை பகிர்ந்த அனிருத், நெருப்பு எமோஜியையும் இணைத்துள்ளார். மேலும் நெல்சா என்று குறிப்பிட்டு வெற்றி கோப்பைக்கான எமோஜியை இணைத்துள்ளார். அவரது இந்தப் பதிவு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X