நான் வொர்த்துதான்டா.. இணையத்தில் கேலி செய்தவர்களுக்கு இசையால் பதிலடி கொடுத்த சாய் அபயங்கர்!

சென்னை: திரையுலகை பொறுத்தவரையில் இசைக்கு என்றைக்குமே முக்கியத்துவம் உள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும், வெகு சில இசையமைப்பாளர்களே, இசையில் தனி தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், இது தனது காலம் என நிரூபித்துள்ளார்கள். அவர்களில் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், யுவன் சங்கர் ராஜா அனிருத் என வரிசைப்படுத்தலாம். இந்த வரிசையில் சாய் அபயங்கருக்கு இடம் உள்ளதா இல்லையா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. ஆனால் கருப்பு படத்தின் டீசர் வெளியான பின்னர் பலருக்கும் இந்த சந்தேகம் தீர்ந்திருக்கும்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் படம் கருப்பு. இன்று சூர்யாவின் 50 வது பிறந்த நாள் என்பதால், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த டீசர் வருகைக்காக பல இசை ரசிகர்களும் காத்துக் கொண்டு இருந்தார்கள். காரணம் இசை சாய் அபயங்கர் என்பதால்.

Music Director Sai Abhyankkar Karuppu Movie Teaser Background Music Receives Good Reviews
Photo Credit:

ஆல்பம் பாடல்களை உருவாக்கி அதை வெளியிட்டு வந்த சாய் அபயங்கர் இசையமைக்கும் முதல் படம் இது என்பதால் பலரும் இந்த படத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறார்கள். காரணம், சாய் அபயங்கர் பாடல்கள் அமைப்பதில் கெட்டிகாரர் தான். அதற்கு உதாரணமாக அவரது ஆல்பம் பாடலான கட்சி சேர, சித்தர புத்திரி பாடல்களைக் குறிப்பிடலாம். இந்த பாடல்கள் எல்லாம் சாய் அபங்கர் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் பலருக்கும் இருந்த கேள்வி, பின்னணி இசையில் சாய் அபயங்கர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான்.

படங்கள்: பாடல்களுக்கு மெட்டு அமைப்பதைக் காட்டிலும், காட்சிகளுக்கு பின்னணி இசை அமைப்பது என்பது கூடுதல் சவால் நிறைந்தது. அதில் சாய் அபயங்கர் என்ன மாதிரியான இசையை கொடுக்க போகிறார் என்ற கேள்வியை இணையவாசிகள் பலரும் எழுப்பி வந்தார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவரது இசையில் முதல் படமே வெளியாகவில்லை. அப்படி இருந்தும், அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களில் கமிட் ஆனார். குறிப்பாக, அட்லீ - அல்லு அர்ஜுன் இணைந்து பணியாற்றும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். மோகன்லால் நடிப்பில் உருவாகும் பல்டி படத்திற்கு இசையமைக்கிறார். சிலம்பரசனின் 49வது படத்திற்கு இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். கார்த்தியின் மார்ஷெல் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். சிவகார்த்திகேயனின் 24வது படத்திலும் கமிட் ஆகியுள்ளார், அதேபோல் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் படத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார்.

Music Director Sai Abhyankkar Karuppu Movie Teaser Background Music Receives Good Reviews
Photo Credit:

விமர்சனம்: முதல் படமே வெளியாகாத நிலையில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களில் இசையமைக்க கமிட் ஆனது குறித்து, அவரை பலரும் நெப்போகிட் என விமர்சித்தனர். தமிழ் சினிமாவில் பல நல்ல நல்ல இசையமைப்பாளர்கள் இருக்கும்போது, சாய் அபயங்கருக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறது. அவர் நெப்போ கிட் என்பதால்தான் என நேரடியாகவே விமர்சிட்தார்கள்.

டீசர் எப்படி இருக்கு: இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் கருப்பு படத்தின் டீசரிலேயே பதிலடி கொடுத்துள்ளார் சாய். சுமார் ஒரு நிமிடத்துக்கு மேல் இடம் பெற்றுள்ள இந்த டீசருக்கு வேற லெவலில் இசையமைத்துள்ளார் அபயங்கர். இன்னும் டீசருக்கு பாடலையே பின்னணி இசையாக அவர் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் சாய் அபயங்கர் செம வொர்த்தான இசையமைப்பாளர் என இணையவாசிகள் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் டீசருக்கும் பாடலையே பின்னணி இசையாக கொடுத்துள்ளதையும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X