சாய் அபயங்கரின் பாடல் செய்த சாதனை.. 20 வயதில் உலகப்புகழ்.. 2024ல் அதிகம் தேடப்பட்ட தமிழ்ப்பாடல்!
சென்னை: பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் சாய் அபயங்கர் அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி வருகிறார். சூர்யாவின் சூர்யா 45 படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
இதனிடையே லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள பென்ஸ் படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசை. அடுத்தடுத்து கவனம் பெற்றுவரும் சாய் அபயங்கர் இசையில் வெளியான ஆசைக்கூட மற்றும் கட்சி சேர பாடல்கள் இவருக்கு சிறப்பான அறிமுகங்களாக அமைந்துள்ளன.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர்: பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் மிகப்பெரிய கவனத்தை கோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பெற்றுள்ளார். 20 வயதேயான சாய் அபயங்கர் அடுத்தடுத்து சூர்யா 45 மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் ஆகிய படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் இவர் வெளியிட்ட கட்சி சேர பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஆட்டம் போட வைத்தது. இந்த பாடல் youtubeல் மட்டுமே 193 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
அடுத்தடுத்த பாடல்கள்: இதையடுத்து ஆசை தீர என்ற பாடலையும் வெளியிட்டார் சாய் அபயங்கர். இந்த பாடலும் மாஸ் ஹிட்தான். இந்த பாடல்கள் சர்வதேச அளவில் இவரது ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியுள்ளது. இந்த பாடல்களே தற்போது அடுத்தடுத்து முன்னணி ஹீரோ மற்றும் தயாரிப்பாளருடன் சாய அபயங்கரை கூட்டணி அமைக்கவும் வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் சாய் அபயங்கரின் கட்சி சேர பாடல் இந்த ஆண்டின் அதிகமாக தேடப்பட்ட பாடல்கள் வரிசையில் சர்வதேச அளவில் முதல் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கூகுள் தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது. 20 வயதேயான சாய் அபயங்கர், இந்தப் பாடல் மூலம் டெய்லர் ஷிப்ட், சாப்ரினா கார்பென்டர் இசைக்கலைஞர்களுடன் சாய் அபயங்கரை இணைத்துள்ளது.
அதிகம் தேடப்பட்ட பாடல்கள் லிஸ்ட்: சர்வத சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பாடலாகவும் சாய் அபயங்கரின் கட்சி சேர என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. 20 வயதிலேயே இந்த பெருமையை பெற்றுள்ளார் சாய் அபயங்கர். இளம் வயதிலேயே இசையமைப்பாளர்களாக களமிறங்கி உலகப்புகழ் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் அனிருத் வரிசையில் சாய் அபயங்கரும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவிருந்த சூர்யா 45 படத்தில் அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
அதிக தேடல்களின் பட்டியல்: உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகமாக தேடப்படும் பிரபலங்கள், திரைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்ட பலவற்றின் பட்டியலை வழக்கமாக கூகுள் நிறுவனம் வெளியிடும் நிலையில், இந்த ஆண்டிற்கான பட்டியல்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதில்தான் தற்போது கூகுளில் இந்த ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட பாடல்கள் வரிசையில் முதல் 10 இடங்களை சர்வதேச அளவில் சாய் அபயங்கரின் கட்சி சேர பாடல் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











