லாக் பண்ணியாச்சு போலயே.. அஜித்தின் கார் ரேஸ் டாக்குமென்டரிக்கு மியூசிக் டைரக்டர் இவரா? தரமான சம்பவம் இருக்கு
சென்னை: நடிகர் அஜித் தற்போது ஆசியன் லீ மென்ஸ் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அப்டேட்களும் நாளுக்கு நாள் வந்து கொண்டே உள்ளது. அஜித்தின் ரேஸிங் அணியில் இருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் வருகிறதோ இல்லையோ, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிரும் வீடியோக்களும் புகைப்படங்களும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகர் அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை இயக்குநர்கள் ஏ.எல். விஜய் மற்றும் சிறுத்தை சிவா இணைந்து ஆவணப்படமாக உருவாக்கி வருகிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் அந்த ஆவணப்படம் தொடர்பான அடுத்த அப்டேட் ஒன்று திரைத்துறையில் உலா வருகிறது.
அதாவது, பொதுவாகவே ஆவண படங்களுக்கு பின்னணி இசை மிகவுமோ முக்கியம். சில ஆவண படங்களுக்கு பின்னணி இசை இல்லாமல் இருப்பதே நல்லது. ஆனால் கார் ரேஸ் போன்ற ஆவணப்படத்திற்கு, அதுவும் திரைத்துறையில் மாஸான ஆக்ஷன் கதாநாயகனாக இருக்கும் அஜித் மற்றும் அவரது கார் ரேஸ் பயணம் தொடர்பான ஆவண படத்திற்கு பின்னணி இசை என்பது ரொம்பவுமே முக்கியமான ஒன்று.
அப்படி இந்த ஆவணப்படத்திற்கு இசையமைபாளர் சாம் சி.எஸ். இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு தற்போது திரைத்துறையில் வேகமாக பரவ காரணமே இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அண்மையில் அளித்த பேட்டி தான்.

அஜித் கார் ரேஸிங்: அந்த பேட்டியில் அவர் பேசும்போது, நான் அஜித் சாரின் அடுத்த படத்திற்கு இசை அமைக்கவில்லை. ஆனால் அவருடன் 100 சதவீதம் பணியாற்றுகிறேன். அது என்ன என்பது குறித்து அடுத்தடுத்து உங்களுக்குத் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பேட்டியில், நான் மூணாறில் படித்துக்கொண்டு இருந்தபோது, தீனா படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் பாடல் படமாக்கப்பட்டது. அப்போது அஜித் சாரை பார்த்தேன். அவர் சக மனிதர்களிடம் இனிமையாக நடந்து கொள்வது அவரது இயல்பிலேயே இருக்கிறது. அவரது இந்த குணத்தாலேயே அவர் சிறந்த மனிதராக உள்ளார்.
ரசிகர்கள் நம்பிக்கை: சினிமா உலகில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி சிகரத்திற்கு வந்தவர். எனக்கு எல்லாம் அவரைப் போன்றவர்கள் உத்வேகம்" என்று தெரிவித்துள்ளார். சாம் சி.எஸ் இவ்வாறு பேசி உள்ளது தான் தற்போது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. அஜித்தின் படத்திற்கு இல்லை என்றால் அவரது ஆவணப்படத்திற்கு தானே இசை அமைத்தாக வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள். மேலும் சாம் சி.எஸ் பின்னணி இசையில் பட்டையைக் கிளப்புவார். அப்படி இருக்கும்போது அவர் பின்னணி இசையில் அஜித்தின் ஆவணப்படம் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











