Sam CS: சோடா புட்டி போட்டதால அதை இழந்திருக்கேன்.. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வேதனை!

சென்னை: ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக மாறியவர் சாம் சிஎஸ். இசையமைப்பாளர், தொடர்ந்து அம்புலி படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை தமிழில் கொடுத்தது. பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட இவர் கேரளாவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

கடந்த ஆண்டில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்திற்கான பின்னணி இசையை அமைத்து அதிகமான கவனத்தை பெற்றுள்ளார் சாம் சிஎஸ்.இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்திருந்தது.

Sam CS Pushpa 2 movie tamil cinema 2

இசையமைப்பாளர் சாம் சிஎஸ்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா 2 படத்தின் பின்னணி இசையமைப்பாளராக செயல்பட்டு மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் சாம் சிஎஸ்ஸின் பின்னணி மிகச்சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்து கமிட்டாகி இயங்கி வருகிறார்.

சிறப்பான படங்கள்: ஓர் இரவு என்ற திரில்லர் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவருக்கு அம்புலி படம் மேலும் பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, ஒடியன், அடங்க மறு, ராக்கெட்ரி நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், சாம்ஹோய், நோட்டா போன்ற படங்கள் சாம் சிஎஸ்ஸிற்கு சிறப்பாக அமைந்தன. குறிப்பாக புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா மற்றும் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான மோகன்லாலின் ஒடியன் படங்கள் சாம் சிஎஸ்ஸிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்தன. இந்நிலையில் கடந்த ஆண்டில் வெளியான புஷ்பா 2 படமும் இவரை இந்திய அளவில் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது.

சாம் சிஎஸ் அட்வைஸ்: இதனிடையே சாம் சிஎஸ் கொடுத்த பேட்டியொன்றில் தன்னை விட அதிகமான இசையமைப்பாளர்கள் அதிகமான திறமைகளுடன் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளதாக தெரிவித்துள்ளார். சினிமாவில் ஜெயிக்க இசை திறமை மட்டுமே போதாது என்று மேலும் அதிகமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். சினிமாவில் நிலைத்தன்மையை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நேர்க்கோட்டில் பபயணித்து இவர் சரியான இசை மற்றும் பின்னணியை கொடுப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார் சாம் சிஎஸ்.

சாம் சிஎஸ் போட்ட சோடா புட்டி: தன்னுடைய லுக்கில் அதிகமான கவனத்தை செலுத்துபவர் சாம் சிஎஸ். இதுகுறித்து பேசியுள்ள அவர், தன்னுடைய கல்லூரி காலகட்டங்களில் தான் கண்ணாடி அணிந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தன்னை பெண்கள் யாரும் பார்க்கவில்லையோ என்று தற்போது தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு தான் லென்ஸ் பயன்படுத்தத் துவங்கியதாகவும் தான் டிரஸ்ஸில் அதிகமான கவனத்தை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சினிமாவில் இந்த டிரஸ்ஸிங் சென்சால் தான் பட வாய்ப்புகளை இழந்ததாகவும் சாம் தெரிவித்துள்ளார். அவர் பாரின் ரிட்டர்ன் போல இருக்கிறார் என்று நினைத்து கிராமத்து சப்ஜெக்ட்களில் தன்னை ரிஜெக்ட் செய்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சாம் குறிப்பிட்டுள்ளார்.

உயரும் தன்னம்பிக்கை: உடையை மற்றும் நமது தோற்றத்தை வைத்தே மற்றவர்கள் நம்மை தீர்மானிப்பதாகவும் அது மட்டுமில்லாமல் சிறப்பான உடையணிவதால் நம்முடைய தன்னம்பிக்கை உயர்வதாகவும் சாம் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் நடிகர்கள் வெளியில் வருவது போல இசையமைப்பாளர்கள் அதிகமாக வெளியில் வருவதில்லை என்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே தோன்றுவதாகவும் அதனால் இருக்கும் நல்ல டிரஸ்களை அப்போதுதான் போட முடிகிறது என்றும் சாம் சிஎஸ் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X