டிமாண்டி காலனி 2 படம் பயங்கரமா இருக்கு.. பீதியை கிளப்பிய இசையமைப்பாளர்!

சென்னை: டிமாண்டி காலனி 2 படம் ரொம்ப பயமா இருக்கு என்று இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி.

2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான வசூலை அள்ளியது.

டிமான்டி காலனி 2: டிமான்டி காலனி திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்த பின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடிக்க பிரியா பவானி சங்கர் லீட்ரோலில் நடித்துள்ளார். மேலும் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.

Music Director Sam CS Speech at Demonte Colony 2 Press Meet

மிரட்டலான டிரைலர்: டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. அதில், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடப்பது போல, கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் டிரைலர் மிகவும் மிரட்டலாக இருந்தது மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த படத்தில் VFX காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு: டிமான்டி காலனி 2 படம் குறித்து டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இயக்குனர், ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம்..ஆனால், கலைஞன் தோற்பதில்லை.

சிக்ஸர் அடிப்பார்: இந்த படத்தில் இயக்குநர் அஜய் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக நான் பல படங்களில் கமிட்டாகவில்லை. அது கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் படம் குறித்து படத்தை பார்த்த போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார்.

படம் பயங்கரமா இருக்கு: அதே போல தயாரிப்பாளர் பாபி படத்தை காதலித்துத் ரசித்து ரசித்து தயாரித்துள்ளார். பணத்தை கொடுத்துவிட்டால் போதும் என்று நினைக்காமல், என்னுடன் வந்து பல விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டார். உண்மையில் இது பாராட்டக்கூடிய விஷயம். படத்தில், டெக்னிஷன் டீம் இப்படத்திற்காக கடுமையாக உழை த்திருக்கிறார்கள். சி.ஜியும் சிறப்பாக வந்து இருக்கு, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம்சும்மா மிரட்டலா வந்து, படத்தை பார்த்து நாங்களே பயந்து விட்டோம் அந்த அளவிற்கு படம் நல்ல வந்து இருக்கு, டிமான்டி காலனி 2 படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தை தரும் என்று இசையமைப்பாளர் சிஎஸ் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X