Sam CS: மூடி மூடி வைத்தாலும்.. புஷ்பா 2 படம் குறித்து பதிவிட்ட இசையமைப்பாளர்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே புஷ்பா 2 படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வந்த நிலையில் படத்தின் பின்னணி இசையை சாம் சிஎஸ் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து முன்னதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனிடையே, இன்றைய தினம் புஷ்பா 2 படம் வெளியாகி சாம் சிஎஸ் இசைக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்துள்ளது. படத்தில் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சாம் சிஎஸ்ஸின் இசை மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிரட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில் படத்தின் முதல் பாதியை காட்டிலும் 2வது பாதியில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான நிலையில் படம் மிகப்பெரிய ஹிட்டடித்து சர்வதேச அளவில் 500 கோடிகளை வசூலித்திருந்தது. இந்நிலையில் புஷ்பா 2 படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ்: படத்தின் முதல் பாகம் மற்றும் தற்போது வெளியாகியுள்ள புஷ்பா 2 படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது பாகத்திற்கு அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மேற்கொண்டுள்ளார். முன்னதாக இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் தரப்பை குற்றம் சாட்டும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பின்னணி இசையை தான் மேற்கொண்டது குறித்து இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உறுதிப்படுத்தியிருந்தார்.
சாம் சிஎஸ் புதிய பதிவு: அல்லு அர்ஜுனின் படத்திற்கு இசையமைப்பது ஃபயராக இருந்ததாகவும் அவர் உற்சாகம் தெரிவித்திருந்தார். தான் படத்தில் இணைய காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார். தற்போது படம் ரிலீசாகியுள்ள நிலையில் சாம் சிஎஸ் இசைக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ரிலீசையொட்டி அவர் படத்தின் போஸ்டரை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் மூடி மூடி வைத்தாலும் விதைகள் மண்ணை முட்டி முளைப்பது உயிரின் சாட்சி என்றும் அவர் தன்னுடைய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு மழையில் சாம் சிஎஸ்: புஷ்பா 2 படத்தின் போஸ்டருடன் அவர் தன்னுடைய பதிவை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் யாரை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். புஷ்பா 2 படத்தின் பின்னணி இசையை மேற்கொண்டுள்ள அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்துவரும் நிலையில் இந்த படம் அவருக்கு மேலும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று தரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











