சென்னையில் பிரம்மாண்ட வீடு.. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
சென்னை: மணிரத்னம் இயக்கிய குரு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உதவியாளராக பணியாற்றியவர் தான் சந்தோஷ் நாராயணன். அந்த படத்தை தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினார். இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சந்தோஷ் நாராயணுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பை பார்க்கலாம்.
'அட்டகத்தி' படத்தில் இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய சந்தோஷ் நாராயணன் முதல் படத்திலேயே ரசிகர்களை வசப்படுத்தினார். அந்த படத்தில் இடம் பெற்ற 'ஆடி போன ஆவணி' பாடலும், 'ஆசை ஒரு புல்வெளி' பாடலும் கல்லூரி மாணவர்களை ரசிக்க வைத்தால், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. அந்த படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா பாடத்திற்கு இசை அமைத்து இருந்தார், அந்த படத்தின் இசையும் மனதை கவரும் வகையில் இருந்தது. பின் சூது கவ்வும் படத்தில், சந்தோஷ் நாராயணின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

சந்தோஷ் நாராயணன்: இசையமைத்த மூன்று படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சந்தோஷ் நாராயணன், மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதி சுற்று, மனிதன், கபாலி, காலா, வட சென்னை, கர்ணன் போன்ற பல படங்களில் இசையமைத்து அனைவரும் பாராட்டும் இசையமைப்பாளராக மாறினார். இதைத் தொடர்ந்து தமிழ் படம் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார். பான் இந்தியா படமான கல்கி 2898 AD இசையமைத்து பாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்தார் சந்தோஷ் நாராயணன். அண்மையில் இவர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் வரும் 'ஆத்தி சத்தனக்கட்ட' பாடலும் 'கண்ணாடி பூவே' பாடலும் படம் வெளியாவதற்கு முன் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
சொத்து மதிப்பு: இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நாளில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்க்கலாம், சந்தோஷ் நாராயணன் ஆரம்பத்தில் ஒரு படத்திற்கு சில ஆயிரங்களை மட்டுமே சம்பளமாக பெற்று வந்தார். தற்போது ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ.1 கோடியில் இருந்து 2 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணனுக்கு சென்னையில் பிரமாண்ட வீடு, சொகுசு கார், பைக், மியூசிக் ஸ்டுடியோ போன்றவற்றை வைத்துள்ளார். மேலும் இவரின் சொத்து மதிப்பு ரூ 22 கோடி முதல் 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
பாடகி தீ: சந்தோஷ் நாராயணனன் இசையமைப்பதை தாண்டி இவர் தனது மகள் தீயுடன் இணைந்து பல ஆல்பம் பாடலையும் பாடியுள்ளர். இவர்கள் சேர்ந்து பாடி இருந்த எஞ்சாமி பாடல் யூடியூபில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவருடைய மகள் மாரி படத்தி ரவுடி பேபி, ஏ சண்டகாரா, காலா படத்தில் வரும் "கண்ணம்மா கண்ணம்மா" , சூரரைப்போற்று படத்தில் வரும் "காட்டுபயலே" போன்ற பல பாடல்களை பாடி இருக்கிறார். அந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்த பாடல்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications











