மகான் பட இசை.. மங்காத்தா ஓபனிங் சீன் - செம பதில் கொடுத்த சந்தோஷ் நாராயணன்

சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகான் படத்தின் அரியாசனம் பாடல் இசையமைப்பதற்கு முன்பு என்ன செய்தார் என்பது குறித்து ரசிகர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட அவர் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தி படத்தின் மூக்லம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்தன.

உச்சத்துக்கு சென்ற சந்தோஷ் நாராயணன்

உச்சத்துக்கு சென்ற சந்தோஷ் நாராயணன்

அட்டக்கத்தி ரிலீஸுக்கு பிறகு சந்தோஷ் நாராயணனுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. முதல் படம் எடுக்கும் பெரும்பாலான இயக்குநர்கள் சந்தோஷ் நாராயணனையே தேடி சென்றனர். அதற்கேற்றவாறு சந்தோஷும் சிறந்த இசையையே வழங்கினார். அப்படி அவர் இசையமைத்த பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், இறுதிச்சுற்று என பல படங்களின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.

வித்தியாசத்தை காட்டிய சந்தோஷ் நாராயணன்

வித்தியாசத்தை காட்டிய சந்தோஷ் நாராயணன்

குறிப்பாக இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் மெகா ஹிட்டடித்தன. சந்தோஷின் இசையில் தனித்துவமும், வித்தியாசமும் தெரிந்தது. இதனால் வெகு விரைவிலேயே டாப் 5 இசையமைப்பாளர்களில் ஒருவரானார் சந்தோஷ் நாராயணன்.

இசை மகான் சந்தோஷ் நாரயணன்

இசை மகான் சந்தோஷ் நாரயணன்

இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த சந்தோஷ் நாராயணன் திடீரென நிறைய படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக்கொண்டார். இருப்பினும் தான் வழங்கும் இசையை தரமாக வழங்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்புடன் பணியாற்றும் சந்தோஷ், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த மகான் திரைப்படத்துக்கு அப்படிப்பட்ட இசையை வழங்கினார். படம் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் இசை நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரசிகர் கேள்வியும் சந்தோஷ் நாராயணின் பதிலும்

ரசிகர் கேள்வியும் சந்தோஷ் நாராயணின் பதிலும்

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மகான் திரைப்படத்தின் அரியாசனம் பாடலை குறிப்பிட்டு, 'இந்தப் பாடலை இசையமைப்பதற்கு முன்னதாக நீங்கள் எந்த போதையை எடுத்துக்கொண்டீர்கள்' என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், 'எந்த போதையையும் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த சீனைத்தான் மறுபடி மறுபடி பார்த்தேன்' என குறிப்பிட்டு மங்காத்தா படத்தில் அஜித்துடைய ஓபனிங் சீன பகிர்ந்திருக்கிறார். தற்போது சந்தோஷ் நாராயணின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X