இளையராஜாவுக்கே ரெஃபரன்ஸ் தேவை.. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் என்ன இப்படி சொல்றாரு!
சென்னை: இசைஞானி இளையராஜா எப்படியும் அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார். படங்களுக்கு இசையமைப்பது, சிம்பொனி செய்வது, பேட்டி அளிப்பது என ஒரு புறம் இருந்தாலும் தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்டு அவர் அனுப்பும் வக்கீல் நோட்டீஸ்கள் பரபரப்பை உண்டாக்குகிறது. இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி படம் குறித்த புரோமோசன் போது, அந்த படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, இளையராஜா குறித்து பேசியுள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளம். கடந்த ஐந்து தசாப்தங்களாக தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில், இசைத்துறையில் இவர் செய்து வரும் அனைத்தும் சாதனையாக உள்ளது. கடந்த மாதத்தில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி, இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தார். இசைஞானி கோபக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரத்தில், தனது அனுகுமுறையில் பிரச்னை உள்ளது என்பதை அவர் ஒத்துக் கொண்டும் உள்ளார்.
அண்மைக் காலமாகவே தமிழ் சினிமாவில் ரெட்ரோ பாடல்களை படங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக இளையராஜா, தேவா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பலர் இசையில் உருவான பாடல்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக, அவரிடத்தில் முறையான அனுமதி பெற்று பயன்படுத்தும் போது எந்த பிரச்னையும் வரவில்லை. ஆனால் அனுமதி பெறாமல் பயன்படுத்தும் போது அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். இசைஞானியின் இந்த செயல் சரிதான் என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அப்படி இருக்கும்போது, அவர் அண்மையில் அளித்த பேட்டியில் இசைஞானி இளையராஜா குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஷான் ரோல்டன்: அதாவது, " என்னிடம் இயக்குநர்கள் பாடல்கள் இசையமைக்கும் போது, ரெபரன்ஸ்க்காக இளையராஜா சாரின் பாடல்களை சொல்லுவார்கள். அதேபோல் ரகுமான் சாரின் பாடல்களை சொல்லுவார்கள். அவர்கள் சொல்லும் பாடல், அவர்கள் மனதில் ஏதாவது உரையாடி இருக்கும், தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால் தான் அப்படியான பாடல்களைக் கேட்கிறார்கள்.
ரெபரன்ஸ்: இயக்குநர்கள் இவ்வாறு இசைஞானி இளையராஜா சாரின் பாடல்களை ரெபரன்ஸாக சொல்வது என்பது தவறு இல்லை. கமல் சாரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், அவருக்கு பாடல்கள் வேண்டும் என்றால் ஹிந்தியில் இருந்தோ, அல்லது வேறு மொழி இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களை ரெபரன்ஸாக சொல்லுவாராம். இளையராஜா சாருக்கே ரெபரன்ஸ் தேவை எனும்போது, நம்மிடம் ரெபரன்ஸ்க்காக பாடலகளை சொல்வதில் தவறு இல்லை" என பேசியுள்ளார்.

இசைஞானி: மேலும் அவர் பேசும்போது, ரெட்ரோ பாடல்களை பயன்படுத்துவது என்பது கதைதான் தீர்மானிக்கும். நான் இசையமைத்த லப்பர் பந்து படத்தில் இடம்பெற்ற பொட்டு வைத்த தங்க குடம் பாடல் பயன்படுத்தினோம். அந்த பாடலை பயன்படுத்த காரணம், கதாநாயகன் விஜயகாந்த் ரசிகர் என்பதுதான். இப்போது விஜயகாந்த் சார் என்றாலே இந்த பாடல்தான் என மாறிவிட்டது. ஆனால் இப்போது சில படங்களில் கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ரெட்ரோ பாடல்கள் பயன்படுத்தப்படுகிறது" என பேசியுள்ளார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இசைஞானி இளையராஜா குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











