Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வம்பிழுத்த தனுஷ் ரசிகர்கள்... கோபமடைந்து பதிலடி கொடுத்த ஷான் ரோல்டன்
சென்னை : நடிகர் தனுஷின் இரண்டு படங்களில் ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதில் விஐபி 2 படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.
இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் அவரை தொடர்ந்து வம்பிழுத்து வருகின்றனர்.
7 ஆண்டுகளை எட்டிய தனுஷின் விஐபி...குவியும் வாழ்த்துக்கள்
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்
நடிகர் தனுஷ் மற்றும் ஷான் ரோல்டன் இருவரும் இணைந்து ப.பாண்டி படத்தில் செயல்பட்டனர். தனுஷின் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக ராஜ்கிரண் தனியாக நடித்த சூரக்காத்து பாடல் மற்றும் பிளாஷ்பேக்கில் வரும் பாடல் ஆகியவை சிறப்பாக அமைந்தன.
சிறப்பாக அமையாத இசை
இந்த படத்தின் பாடல்களை சிறப்பாக அமைத்த ஷான் ரோல்டன் அடுத்ததாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் தனுஷூடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. தொடர்ந்து அடுத்த படத்தில் இருவரும் இணையவில்லை.
வம்பிழுத்த ரசிகர்கள்
அதனால் அடுத்த படத்தில் தயவுசெய்து தனுஷுடன் இணையாதீர்கள் என்று தனுஷ் ரசிகர்கள் சிலர் தொடர்ந்து அவரை வம்பிழுத்து வந்தனர். இதனிடையே, 17ம் தேதி அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்த நிலையில் தனுஷூடன் மட்டும் மீண்டும் இணைய உள்ளதாக அறிவிக்காதீர்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.
ரசிகர்களுக்கு பதிலடி
ரசிகர்களின் இந்த பதிவுகள் ஷான் ரோல்டனை கோபமடைய வைத்துள்ளது. விஐபி 2 படத்தை ஒட்டுமொத்தமாக முடிக்க தனக்கு 3 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் அந்த நேரத்தில் எவ்வாறு சிறப்பான இசையை கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில இதயம் இல்லாத தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து இவ்வாறு பேசிவருவது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிறப்பான இசையை தருவேன்
வரும்காலத்தில் தனுஷுடன் இணைந்து சிறப்பான படத்தை கொடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது சிறப்பான இசையை ரசிகர்களுக்கு வழங்குவேன் என்றும் அதற்கான சரியான நேரம் வரும்போது தன்னை நிரூபிப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.