இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபினின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் விபின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஹலோ நான் பேய் பேசுகிறேன், ஜுங்கா, கேப்மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சித்தார்த் விபின்.

வேற லெவல் பர்ஃபாமன்ஸ்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களில் அவருடைய பர்ஃபாமன்ஸ் வேற லெவலில் இருந்தது. குறிப்பாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்திடம் சித்தார்த் விபினும் அவரது டீம்மும் சிக்கி சின்னாபின்னமாக காட்சி கதற வைக்கும்.

கேரள ஸ்டைலில் திருமணம்
இந்நிலையில் சித்தார்த் விபினுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. சித்தார்த் விபினுக்கும் ஷ்ரேயா என்பவருக்கும். நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க கேரள ஸ்டைலில் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.

வைரலாகும் போட்டோஸ்
திருமணம் முடிந்த சித்தார்த் விபினுக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சித்தார்த் விபினின் திருமண போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேரில் வாழ்த்து..
இதனிடையே சித்தார்த்தின் நண்பரும், நடிகருமான நகுல் நேரில் சென்று வாழ்த்தியதோடு, திருமண புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதேபோல் தனக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் சித்தார்த் விபின் நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











