சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

மும்பை: பிரபல இசையமைப்பாளர் தனது இளம் வயதில் உயிரிழந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல இரட்டை இசை அமைப்பாளர்கள் சஜித் -வஜித். பாலிவுட்டில் பிரபலமான இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

சல்மான் கானின் பியார் கியா தோ தர்னா க்யா படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர்கள் இவர்கள்.

சல்மானின் வான்டட்

சல்மானின் வான்டட்

இதையடுத்து பாகி, மா துஜே சலாம், சோரி சோரி, தேரே நாம், பார்ட்னர், வெல்கம் த கில்லர், ரவுடி ரத்தோர் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். சல்மான் கானின் வான்டட், தபாங், ஏக் தா டைகர், அக்ஷய்குமாரின் ரவுடி ரத்தோர், சிங் இஸ் பிளிங் படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர். தாங்கள் இசை அமைக்கும் படங்களில் சில பாடல்களை இசை அமைப்பாளர்களில் ஒருவரான வஜித்கான் பாடுவது வழக்கம்.

உடல்நிலை

உடல்நிலை

அப்படி பல பாடல்களை அவர் பாடி உள்ளார். சில படங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். வஜித் கான், சிறுநீரக பிரச்னை காரணமாக, மும்பை செம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உடல்நிலை மோசமானது. இதையடுத்து இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 42.

சிறுநீரக பிரச்னை

சிறுநீரக பிரச்னை

இதை இசை அமைப்பாளர் சலீம் மெர்ச்சன்ட் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, அவருக்குச் சிறுநீரக பிரச்னை இருந்தது. அதற்காக, சில காலத்துக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமீபத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது பற்றி தெரிய வந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்று விட்டார்

சென்று விட்டார்

அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவரது நிலைமை மோசமடைந்ததால் இன்று அதிகாலை மரணமடைந்தார் என்று தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாமும் இதை உறுதிப்படுத்தி உள்ளார். எனது சகோதரர் வஜித், எங்களை விட்டு சென்றுவிட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

இர்ஃபான் கான்

இர்ஃபான் கான்

வஜித் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பாலிவுட்டுக்கு இது மோசமான காலம் போல் இருக்கிறது. புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இர்ஃபான் கான் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் பிரபல நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார். மேலும் சில சின்னத்திரை நடிகர்கள் உயிரிழந்தனர். இப்போது இளம் இசை அமைப்பாளர் உயிரிழந்திருப்பது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X