twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவின் தாயார் மரணம்!!

    By Shankar
    |

    பிரபல இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவின் தாயார் சுதக்ஷினா தேவி செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 64.

    தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சுந்தர் சி பாபு.

    தொடர்ந்து அஞ்சாதே, நாடோடிகள், விருதகிரி உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

    இவர் பிரபல வீணை வித்வான் சிட்டிபாபுவின் மகன் ஆவார். இவரது தாயார்தான் சுதக்ஷனா தேவி. இவர் ஆந்திர வங்கியின் நிறுவனரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் கவர்னருமான பட்டாபி சீதாராமய்யாவின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வு நேரத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வீணை வகுப்பு நடத்தி வந்தார் சுதக்ஷனா.

    கடந்த சில தினங்களாக உடல்நலமில்லாமல் இருந்தார் சுதக்ஷினா தேவி. நேற்று மாலை அவர் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி, செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார்.

    அவருக்கு சுந்தர் சி பாபு தவிர, ரங்கசாயி, ராதாகிருஷ்ணா ஆகிய மகன்கள் உள்ளனர்.

    அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை சென்னையில் நடக்கிறது.

    English summary
    Smt. Sudhakshina Devi, w/o Late Veena Chittibabu expired on Tuesday 5th April 2011 at Chennai. She was the granddaughter of Late Pattabhi Seetharamaiah, founder of Andhra Bank and ex-Governor of Madhya Pradesh. A veena artiste herself, she accompanied her husband for concerts all over the world. She was also taking up veena classes free for those who were interested in learning veena.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X