Thaman Net worth: தாறுமாறாக இசையமைக்கும் தமன்.. தலையை சுத்த வைக்கும் சொத்து மதிப்பு!
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக அதிரடி காட்டி வரும் இசையமைப்பாளர் தமன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், மணிகண்டன் நடித்த பாய்ஸ் படத்தில் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு நடிப்பெல்லாம் நமக்கு செட் ஆகாது என்பதை புரிந்துக் கொண்ட தமன் இசையமைப்பாளராக மாறி ஏகப்பட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், அவரது சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க..
40 வயசாகிடுச்சு: பாய்ஸ் படத்தில் யங் பாயாக நடித்த தமனுக்கு தற்போது 40 வயதாகிறது. 1983ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பிறந்த தமன் 40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். ஆந்திராவில் பிறந்த தமன் தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆனாலும், தொடர்ந்து அதிகமாக தெலுங்கு படங்களுக்கே இசையமைத்து வருகிறார். 2009ல் தெலுங்கில் வெளியான மல்லி மல்லி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தமன்.
எல்லாமே ஹிட் ஆல்பம்: ஈரம், தில்லாலங்கடி, ஒஸ்தி, தடையற தாக்க, காதலில் சொதப்புவது எப்படி, சேட்டை, வாலு, காஞ்சனா 2, தில்லுக்கு துட்டு, ஈஸ்வரன், எனிமி, வாரிசு என பல தமிழ் படங்களுக்கு ஹிட் ஆல்பங்களை போட்டுள்ள தமன் தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பாலய்யா என அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் செம பிஜிஎம் போட்டு படங்களை ஹிட்டாக்கி வருகிறார். இந்த ஆண்டு அவர் வாரிசு படத்துக்கு போட்ட ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் எல்லாமே ரசிகர்களை ஆட்டம் போட வைத்தன.
சம்பளம்: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞர், பவன் கல்யாணின் ஓஜி, நயன்தாராவின் 75வது படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் ஒரு படத்துக்கு அதிகப்படியாக 3.5 கோடி முதல் 5 கோடி வரை வாங்கி வருவதாக கூறுகின்றனர்.
சொத்து மதிப்பு: 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இசையமைப்பாளர் தமனிடம் 41 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும் ஹைதராபாத் மற்றும் சென்னையில் அவருக்கு சொந்தமான வீடுகளும், இடங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











