தளபதி 66.. அந்த தாறுமாறான அப்டேட்டும் வந்தாச்சு.. விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ரெண்டாவது லட்டு!
சென்னை: தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் இன்னொரு ஹாட் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

தளபதி 66 பூஜை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தின் பூஜை ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அதே போன்ற பெரிய தலைமுடி கொண்ட ஹேர்ஸ்டைலையே நடிகர் விஜய் மெயின்டெயின் செய்து வருகிறார்.

டபுள் ரோல்
மீண்டும் நடிகர் விஜய் டபுள் ரோலில் தளபதி 66 படத்தில் கலக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தளபதி 66 படத்தை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

புஷ்பா பொண்டாட்டி
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி டிரெண்டானதை போல, தளபதி 66 படத்தின் ஹீரோயின் அறிவிப்பு வெளியானதும் புஷ்பா பொண்டாட்டி என்கிற வார்த்தை டிரெண்டாகி வருகிறது. அலா வைகுந்த புரமுலோ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்துக்கு ஹீரோயினாகி உள்ள நிலையில், புஷ்பா பட ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்தில் ஹீரோயினாகி உள்ளார்.

தமன் ஆன்போர்ட்
ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இசையமைப்பாளராக இந்த படத்தில் தமன் இணைந்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. நடிகர் விஜய் படத்திற்கு இசையமைக்க காத்திருந்த தமனுக்கு இது மிகப்பெரிய வேட்டை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

6 சிக்ஸர்
தளபதி 66ல் டபுள் சிக்ஸ் உள்ள நிலையில், டோலிவுட் திரையுலகையே தனது பிஜிஎம் மற்றும் பாடல்கள் தியேட்டர்களில் தீப்பிடிக்க வைப்பது போல தெறிக்கவிட்டு வரும் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த படத்தில் 6 சிக்ஸர்களை விளாச போவதாக சந்தோஷத்தில் போட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











