Thaman: யாரும் கல்யாணம் செஞ்சுக்காதீங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. பிரபல இசையமைப்பாளர் புலம்பல்!

சென்னை: இசையமைப்பாளர் தமன் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான ஷங்கரின் பாய்ஸ் படத்தில் இவர் சித்தார்த், நகுல் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ளார்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இதயம் முரளி படத்தில் அதர்வாவுடன் இணைந்து தமன் நடித்துள்ளார், இதன் டைட்டில் ரிலீஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படத்திற்கு இசையும் தமன்தான். இந்நிலையில் திருமணம் குறித்து இவரது பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Thaman Idhayam murali movie tamil cinema

இசையமைப்பாளர் தமன்: இசையமைப்பாளர் தமன் அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து அதன்மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார். இசையமைப்பாளர், நடிகர், ரியாலிட்டி ஷோவின் நடுவர் என அடுத்தடுத்து தன்னை பிசியாக வைத்துவரும் தமன், 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ளார். முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் சித்தார்த், நகுல், ஜெனிலியா உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் தமன். இதையடுத்து தன்னை இசையமைப்பாளராக சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.

மீண்டும் நடிகரான தமன்: இந்நிலையில் இவர் மீண்டும் நடிகராக களமிறங்கவுள்ளார். அதர்வா நடிப்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிவரும் இதயம் முரளி படத்தில்தான் தமன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இதில் தமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அதர்வா தமனின் திடீர் திருமணத்தை நினைத்து சிரிப்பதாக இந்த வீடியோவில் காணப்பட்டது. இந்தப் படம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் தமன் நடுவராக செயல்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

திருமணம் குறித்து கருத்து: இந்நிலையில் திருமணம் குறித்த தமனின் சமீபத்திய பேட்டி ஏராளமான ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமன், யாருமே திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம் என்று தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார். பெண்கள் அனைவரும் முன்பு போல இல்லை என்றும் சுதந்திரமாக இருக்க விரும்புவதாகவும் யாருக்கு கீழும் இருக்க விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார். அப்படி ஒரு பெண்கள் சமுதாயத்தை இழந்துவிட்டதாகவும் மிகவும் கடினமாக இருப்பதாகவும் தமன் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமா செஞ்சுக்காதீங்க: கொரானாவிற்கு பிறகு எல்லாம் மாறிவிட்டதாகவும் இன்ஸ்டாகிராம் இதில் முக்கியமான பங்கை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தமன், அனைவரும் பாசிட்டிவ்வாகவே ரீல்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர் என்றும் வாழ்க்கையில் பிரச்சினைகளை யாரும் பேசுவதில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் தான் யாருக்கும் திருமணம் செய்துக் கொள்ள பரிந்துரைக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இவர் பாடகி ஸ்ரீவர்தினியை திருமணம் செய்து ஒரு மகனுக்கும் அப்பாவாக உள்ள நிலையில் திருமணம் குறித்த இவரது கமெண்ட் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Read more about: thaman tamil cinema தமன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X