விஜய்யின் வாரிசு பட பாடல்கள் குறித்து தமன் சுவாரஸ்யம்.. காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் படத்திற்கு பிறகு 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு படம்.

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன்.

இந்தப் படத்தின் டைட்டில் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியானது பீஸ்ட். இந்தப் படத்திற்கு சிறப்பான பிரமோஷன்கள் கொடுக்கப்பட்டது. நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புடன் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

ஆனால் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இதனால் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால் படம் வசூல்சாதனை புரிந்தது. இதையடுத்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

வித்தியாசமான விஜய்

வித்தியாசமான விஜய்

இந்தப் படத்தில் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான விஜய்யை பார்க்கலாம் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எமோஷனல் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் இந்தப் படத்தில் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் சூட்டிங்

ஐதராபாத்தில் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங், சென்னையை தொடர்ந்து தற்போது மீண்டும் ஐதராபாத்திலேயே நடைபெற்று வருகிறது. படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்க இயக்குநர் திட்டமிட்டு சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாடல்கள் குறித்து தமன்

பாடல்கள் குறித்து தமன்

திரையரங்குகளில் வாரிசு படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். அரபிக்குத்து போன்ற மாஸான அனுபவத்தை படத்தின் ஒரு பாடல் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து படத்தின் முதல் மற்றும் டைட்டில் பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

படத்தின் டைட்டில்

படத்தின் டைட்டில்

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 22ம் தேதி வெளியாகின. வாரிசு என்ற டைட்டில் மற்றும் 3 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்தப் போஸ்டர்கள் பல்வேறு விமர்சனங்களை பெற்றன. ஆனால் ரசிகர்கள் போஸ்டர்களை கொண்டாடினர்.

Recommended Video

Thalapathy வேற Level | Vijay பெயரில் இரத்ததான Mobile App *kollywood | Filmibeat Tamil
தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படம் ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X