ஷங்கரின் கேம் சேஞ்சர்.. ஒன்றும் சரியில்லை.. ஓபனாக அனைத்தையும் போட்டுடைத்த இசையமைப்பாளர் தமன்
ஹைதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் கதையில் ராம்சரண் நடித்திருக்கும் திரைப்படமான கேம் சேஞ்சர் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்க்ளில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று புகழப்படுபவர் ஷங்கர். ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இயக்கிய 2.0, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் ஷங்கருக்கு சரக்கு தீர்ந்துவிட்டது; அவர் டீசண்ட்டாக சினிமாவிலிருந்து ஒதுங்கிக்கொள்ளலாம் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். அதுவும் இந்தியன் 2 படத்தை எல்லாம் கலாய்த்து தீர்த்துவிட்டனர் ரசிகர்கள்.

கேம் சேஞ்சர்: சூழல் இப்படி இருக்க கொரோனா காலத்தில் நடந்த ஒரு Zoom மீட்டிங்கில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒன் லைன் பிடித்துப்போனதை அடுத்து அதனை டெவலப் செய்து கேம் சேஞ்சர் என்ற படத்தை உருவாக்கினார் ஷங்கர். இதில் க்ளோபல் ஸ்டார் என்று தெலுங்கு ரசிகர்களால் புகழப்படும் ராம்சரண் ஹீரோவாக கமிட்டானார். அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகியிருந்தது.
இந்த வருடம் ரிலீஸ்: ஷங்கர் எப்படியாவது இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்று முனைப்புடன் வேலை செய்ததாக திரைத்துறையிலிருந்து செய்திகள் வெளியாகின. ஷங்கர் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் படம் ரிலீஸானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வழக்கமான ஷங்கர் பட ஸ்டைலிலேயே இந்தப் படம் இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினார்கள். முக்கியமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில்கூட படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதெல்லாம் நியாயமா?: முக்கியமாக படத்தின் மேக்கிங்கை வறுத்தெடுத்துவிட்டனர் ரசிகர்கள். அட்லீ எப்படி தன்னுடைய படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து ஜவான் படத்தை உருவாக்கினாரோ அதேபோல் அவரது குருநாதரான ஷங்கரும் கேம் சேஞ்சர் படத்தை தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து சுட்டிருக்கிறார் என்று ஓபனாகவே அடித்தார்கள். படம் படுதோல்வியை மட்டுமின்றி தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கு கடுமையான நஷ்டத்தை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமனின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஒரு பாடல் என்பது இசைக்கும், இசையமைப்பாளருக்கும் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. என்னால் 25 மில்லியன் வியூஸ் அள்ளும் பாடல்களை கொடுக்க முடியும்தான். ஒரு மெலோடி பாடல் மட்டுமே 50 மில்லியன் பார்வைகளை வரவழைக்கும். ஆனால் ஒரு பாடல் ஹிட்டாவது நடன இயக்குநர்களின் கைகளிலும் இருக்கிறது. அந்தப் பாடல் திரையில் வரவேற்பை பெற வேண்டுமென்றால் நடன இயக்குநர்கள் சரியான நடன அசைவுகளை அமைக்க வேண்டும்.
கேம் சேஞ்சரில் அது இல்லை: ஆனால் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஜருகண்டி, ரா மச்சா ரா என ஒரு பாடலிலும் ரசிகர்களை கவரும் ஹூக் ஸ்டெப்பே இல்லை. அதேசமயம் அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஒவ்வொரு பாடலிலும் ரசிகர்களை கவரும் ஹூக் ஸ்டெப்புகள் இருந்தன. நடனம் சரியாக இருந்தால்தான் கேமராமேனும் அந்தப் பாடலை சரியாக படம் பிடிப்பார். கேம் சேஞ்சர் படத்தில் அது இல்லாததால் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகவில்லை" என்றார். கேம் சேஞ்சர் படத்துக்கு பிரபுதேவாதான் நடன அமைப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











