கண்ணீரே வந்துவிட்டது.. இளையராஜாவின் வீடியோ குறித்து இளம் இசையமைப்பாளர் உருக்கம்!

சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியம் குறித்த இளையராஜாவின் வீடியோ கண்ணீரை வரவழைத்துவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

SPB குறித்த இளையராஜாவின் வீடியோ கண்ணீரை வரவழைத்துவிட்டது.. பிரபலங்கள் உருக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து எஸ் பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

பிரபலங்கள் பிரார்த்தனை

பிரபலங்கள் பிரார்த்தனை

சினிமா பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் எஸ்பி பாலசுப்ரமணியம் நலமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டி வருகின்றனர்.

பாலு வா.. சீக்கிரம் வா..

பாலு வா.. சீக்கிரம் வா..

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என பாலு வா.. சீக்கிரம் வா என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நமக்குள் சண்டை இருந்தாலும் அது நட்புதான் என்றும் நம்முடைய நட்பு இசையும் ஸ்வரமும் போன்றது என்றும் கூறியிருந்தார்.

உள்ளுணர்வு சொல்கிறது

உள்ளுணர்வு சொல்கிறது

நம்முடைய நட்பை யாராலும் பிரிக்க முடியாது, என் உள்ளுணர்வு நீ விரைவில் நலம்பெற்று வருவாய் என கூறுகிறது, அது நிஜமாகட்டும் என்றும் கூறியிருந்தார். இளையராஜாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

கண்ணீர் வந்துவிட்டது

கண்ணீர் வந்துவிட்டது

இந்நிலையில் இளையராஜாவின் இந்த வீடியோவை இசையமைப்பாளர் தமன், தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவையும் ராஜா சாரின் உண்மையான சொற்களையும் பார்த்த பிறகு கண்ணீர் வந்து விட்டது.... அவர்கள் தங்கள் நட்பை மிகவும் மதித்தனர்.. அப்படிதான் ஆயிரக்கணக்கான பாடல்களால் அவர்கள் நம் இதயத்தை வென்றார்கள்.. நான் பிரார்த்தனை மற்றும் வலுவான நட்பை நம்புகிறேன். கடுமையாக பிரார்த்திப்போம் !! என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X