திரைப்பிரபலங்களை விடாது துரத்தும் கொரோனா… பிரபல இசையமைப்பாளரும் கொரோனாவால் பாதிப்பு !
சென்னை : முன்னணி இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
அண்மையில்,மீனா, அருண்விஜய், மகேஷ்பாபு, லட்சுமி மஞ்சு ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா 3வது அலை
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
இன்று மட்டும் 1,17,382 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,70,33,924 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 2481 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

தமனுக்கு கொரோனா
இந்நிலையில், முன்னணி இசையமைப்பாளர் தமன் , தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு லேசான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், சோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெலுங்கில் பிஸி
தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன். ஷங்கர் இயக்கி வரும் ராம் சரண் 15, வம்சி பைடிப்பள்ளியின் விஜய் 66 படத்தில் தமன்தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











