விருதுகளுக்கு தயாராகுங்கள்.. வாத்தி படம் குறித்து விஜய் பட இசையமைப்பாளர் ட்வீட்

சென்னை: வாத்தி படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜிவி பிரகாஷை வாழ்த்தி வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் விருதுகளுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட்டிலிருந்து தொடங்கி ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துவந்த தனுஷுக்கு சில காலம் போதாத காலமாக இருந்தது. அதனைப் போக்கும் விதமாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. எனவே அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கிறார் தனுஷ்.

 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வாத்தி படம்

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வாத்தி படம்

இதனையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் தனுஷ். படத்துக்கு வாத்தி என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கல்வி வணிகமயமாவதை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அது படத்தின் ட்ரெய்லர் மூலம் உறுதியானது. ட்ரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 வாத்தி படம் நாளை ரிலீஸாகிறது.

வாத்தி படம் நாளை ரிலீஸாகிறது.

இந்தச் சூழலில் வாத்தி படமானது உலகெங்கும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் புக்கிங்கும் ஓபனாகி ஜரூராக நடந்துவருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வாத்தி வெளியாவதால் திரையரங்குகளுக்கு சென்று கொண்டாட தனுஷ் ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

 விருதுகளுக்கு தயாராகுங்கள் ப்ரோ

விருதுகளுக்கு தயாராகுங்கள் ப்ரோ

இந்நிலையில் வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் வாத்தி படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை பாராட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், " விருதுகளுக்கு தயாராகுங்கள் ஜிவி பிரகாஷ். வாத்தி மற்றும் சார் படத்திற்கு முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த முறை உங்களுடன் இணைய முயற்சி செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஜிவி பிரகாஷும் நன்றி தெரிவித்துள்ளார்.

 சார்ச்சையில் வாத்தி தனுஷ் பேச்சு

சார்ச்சையில் வாத்தி தனுஷ் பேச்சு

இதற்கிடையே சமீபத்தில் வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு நடந்தது. அதில் பேசிய தனுஷ் தனது ட்யூஷன் காலத்து நினைவுகள் குறித்து அசைபோட்டார். ஆனால் அந்தப் பேச்சு; ஏற்கனவே சீரழிந்துகொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மேலும் தூண்டிவிடுவது போல் இருக்கிறது. எனவே தனுஷ் தனது பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென ஆசிரியர்கள்ம், சமூக நல ஆர்வலர்களும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X