கானா பாடகர்னு முத்திரை குத்திவிட்டார்கள்.. ஃபீல் பண்ணும் இசையமைப்பாளர் தேவா!
சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் கானா பாடல்களுக்கு ஒரு தனி மவுசு உண்டு. அப்படி கானா பாடல்களின் தேவனாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் தேன் இசைத்தென்றல் தேவா.
80களின் மத்தியிலிருந்து 2012 வரை பரபரப்பாகவும் புகழ் உச்சியிலும் இருந்த தேவா, சிறிய இடைவெளிக்கு பிறகு லைம் லைட் வெளிச்சத்திற்கு வந்துள்ள இவர் மனம் திறந்து பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தேன் இசைத்தென்றல் தேவா: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த தேவா இசையமைத்த முதல்படம் வெளியாகவே இல்லை. இதையடுத்து மீண்டும் வாய்ப்பை தேடி கிட்டத்தட்ட பல ஆண்டுகள் அலைந்தார். அந்த நேரத்தில் அண்ணாமலை பட வாய்ப்பு கிடைத்தது. இந்த அற்புதமான வாய்ப்பை சிறிதும் வீணடிக்காமல் ஒரே படத்தில் உலகளவில் பிரபலமானார். இப்படம்தான் அவரின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்.
கொஞ்சம் வருத்தம்: அதனை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய கொடிகட்டி பறந்தார். ஏ.ஆர். ரஹ்மான் ஒரு புறம் கொடியை நாட்டி இருந்தாலும், தேவா கொடியும் உயரத்தில் பறந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது இவர் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். நான் இசையமைக்க வந்து பல ஆண்டுகள் கழித்துதான் கானா பாடல்களை உருவாக்கினேன். ஆனால், என்னை உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டுபோனது கானா பாடல்கள்தான்.
அடுத்தடுத்த படங்களில்: அதில், ஆசை, குஷி போன்ற படங்களுக்கு மெலடி பாடல்களை கொடுத்திருக்கிறேன். அதை யாரும் சுட்டிக்காட்டவே இல்லை, ஆனால் கானா இசையமைப்பாளர் என்றே முத்திரை குத்திவிட்டார்கள் அது தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. சிறிது கால இடைவேளைக்கு பிறகு, தற்போது, அறம் படத்தை இயக்கிய கோபி நயினாரின் காலனி படத்திலும், வா, வரலாம் வா, பி - 2 போன்ற படத்திற்கும், இன்னும் சில படங்களும் இசையமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











