Vijay Antony: ஒவ்வொரு மனுஷனுக்கும் அந்த விஷயம் பலமா இருக்கனும்.. விஜய் ஆண்டனி ஓபன்!
சென்னை: நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பன்முகத் திறமையோடு கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது அடுத்தடுத்த படங்கள் சிறப்பாக கைக்கொடுக்கவில்லை என்ற போதிலும் ரசிகர்களை கொண்டாட செய்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஆண்டனி இசையில் உருவான மத கஜ ராஜா படம் தற்போது பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்த நிலையில் இதில் இசையமைப்பாளர் என்ற வகையில் பங்கேற்ற விஜய் ஆண்டனி பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகத் திறமையோடு கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பாஸ்ட் பீட் கேட்டகரியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. ஆட்டம் போட வைத்தவை. ஒரு கட்டத்திலும் நடிப்பிலும் தன்னை இணைத்துக் கொண்ட விஜய் ஆண்டனி, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தும் நிலையில், தான் நடிகன் இல்லை என்றும் ஹீரோ என்றும் அவர் முன்னதாக ஒரு பேட்டியில் விளக்கம் அளித்திருந்தார்.
மதகஜராஜா பட பிரீ ரிலீஸ் நிகழ்வு: ஒரு கட்டத்தில் இயக்குநராகவும் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார். இந்நிலையில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் ரிலீசாகவிருந்த மதகஜராஜா படம் தற்போது ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் சிறப்பான வகையில் நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளராக கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் இவரது பேச்சு மட்டுமில்லாமல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஷாலிடம் இவர் செயல்பட்ட தன்மையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மதகஜராஜா படம்: ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பல்வேறு தருணங்களில் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்வாங்கியது. இந்நிலையில் தற்போது ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் விஷாலுடன் சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, சோனு சூட், சதீஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் ஆர்யா கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். இதேபோல நடிகை சதாவும் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி பேச்சு: தற்போது தன்னுடைய படங்களில் மட்டுமே இசையமைத்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில விஷாலுக்கு அவர் இசையமைத்துள்ள இந்தப்படம் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால் மேடையில் காய்ச்சல் காரணமாக நடுக்கத்துடன் காணப்பட்ட நிலையில், அவரது கைகளை பிடித்து விஜய் ஆண்டனி சேரில் அமர வைத்த நிகழ்வு ஏராளமான ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் காசை காட்டிலும் பேமிலிதான் முக்கியம் என்று தெரிவித்தார்.
குடும்பம் பலமா இருக்கனும்: ஒவ்வொரு மனிதனுக்கும் காசு பணம் இருக்கோ இல்லையோ குடும்பம் பலமாக இருந்தால் அதுவே போதும் என்றும் அவர் கூறினார். எவ்வளவு பணம் பொருள் இருந்தாலும் ஒருவருக்கு குடும்பம் இருக்காது என்று சுட்டிக் காட்டிய விஜய் ஆண்டனி, பணம் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து 70, 80 வயதுக்கு பிறகு பணத்தால் பிரயோஜனம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.


Click it and Unblock the Notifications











