Vijay Antony: இரண்டே வரியில் விஜய் ஆண்டனி பொலிடிக்கல் கிளாஸ்.. விஜய் கூட இன்னும் இப்படி பேசல..
சென்னை: உலக நாடுகளே தற்போது மிகவும் உன்னிப்பாக கவனித்து வரும் விஷயம் என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் போர் ஏற்படுமா இல்லையா என்பது குறித்துதான். காரணம், காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் இருக்கும் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதல் தான். இந்த தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவத்தால் மொத்த இந்தியாவும் அதிர்ச்சி அடைந்தது. இது மட்டும் இல்லாமல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லும் போது ஒவ்வொருவரையும் முஸ்லிமா இல்லையா எனக் கேட்டு கேட்டு சுட்டதாக கூறப்படுகிறது. மேலும், என் கணவனைக் கொன்று விட்டார்கள், என்னையும் கொன்று விடுங்கள் எனக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு தீவிரவாதிகளோ, நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம், இங்கு நடந்ததை மோடியிடம் சொல் எனக் கூறியதாக ஊடகங்களில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் மக்கள் உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்லைப் பகுதியில் ராணுவத்தை இரு நாடுகளும் குவித்து வருகிறது. இந்த சம்பவத்திற்கும் தங்கள் நாட்டு அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

பதற்றம்: எல்லைகளில் பதற்றமான சூழல் ஒரு புறம் இருந்தாலும், உள்நாட்டில் இந்த சம்பவத்தை வைத்து சிலர் பிரிவினைவாத கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் சிலர் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த கருத்துகள் அபத்தமாக இருந்தது மட்டும் இல்லாமல் விஷமத்தனம் ஆகவும் இருந்தது.
அபத்தம்: பல திரைப்பிரபலங்கள் இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். பலரும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தை பலரும் மிகவும் கவனமாக கையாண்டார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

பாகிஸ்தான் மக்கள்: இந்த சம்பவம் தொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், " காஷ்மீரில் உயிரிழந்த சகோதர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதேசமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மை போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்" என குறிப்பிட்டுள்ளார். அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர் அவரது கருத்தை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











