யுவனின் லாங் ட்ரைவ் இசைக் கச்சேரி! சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்காம்! ரசிகர்களே குடையோட போங்க!

சென்னை: யுவன் சங்கர் ராஜாவின் ப்ளே லிஸ்ட்டினை ரசிகர்கள் இணையத்தில் யுவன் ட்ரக்ஸ் என கூறி கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் தி கோட் படத்திற்கு இசை அமைத்து வருகின்றார். இது குறித்த அறிவிப்பை நேற்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் யுவனின் லாங் ட்ரைவ் இசைக் கச்சேரி இன்று அதாவது ஜூலை 27ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இதற்கு யுவனின் லாங் ட்ரைவ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் இணையத்தில் விற்பனையாகி வருகின்றது.

இந்த இசைக் கச்சேரியில் கிட்டத்தட்ட 35இல் இருந்து 36 பாடல்களை நாங்கள் பாடவுள்ளோம். அதில் பெரும்பாலும் எனது குரலில்தான் பாடல்கள் இருக்கும். வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்தப்படுவதைப் போல ரசிகர்கள் மேடைக்கு அருகில் மேடையைச் சுற்றி 360 டிகிரிக்கும் இருக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என யுவன் தெரிவித்திருந்தார்.

Yuvan Shankar Raaja Ilayaraaja

இளையராஜா, சிம்பு: இது மட்டும் இல்லாமல், நடிகர் சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் அப்பாவும் இசைஞானியுமான இளையராஜாவை அழைத்துப் பார்க்கின்றேன் அவர்கள் வந்தால் அவர்களும் பாடுவார்கள் எனக் கூறியிருந்தார். இதனால் சிம்புவின் குரலிலும் யுவன் சங்கர் ராஜாவின் குரலிலும் பாடலைக் கேட்க ஆர்வமான ரசிர்கர்கள் சிம்பு வரவேண்டும் என பிராத்தனை செய்து கொண்டு உள்ளனர்.

Yuvan Shankar Raaja Ilayaraaja

இடியுடன் மழை: இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்றைய சென்னை வானிலை நிலவரம் தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், " சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவித்துள்ளது.

Yuvan Shankar Raaja Ilayaraaja

குடையுடன்: இதில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இசைக் கச்சேரிக்குச் செல்லும் ரசிகர்கள் குடையுடன் செல்வது மிகவும் நல்லது என பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே ஒருமுறை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசைக் கச்சேரி நடத்தும்போது மழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டதால், ரசிகர்களை குடையுடன் வரச்சொல்லி அறிவுருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X